search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கர்நாடகாவில் இருந்து உரிய நீரை பெறவில்லை - தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்
    X

    கர்நாடகாவில் இருந்து உரிய நீரை பெறவில்லை - தமிழக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம்

    • ஜூலை மாதத்தில் 31 டி.எம்.சி. அடி தண்ணீரையும் கர்நாடகம் திறந்துவிட வேண்டும்.
    • தண்ணீரை திறந்து விடுவது கஷ்டம் என்றும் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் பேசி இருக்கிறார்.

    சென்னை:

    முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், பாசனத்திற்கான தண்ணீரை கோடை மழை மூலமாகவும், கர்நாடகம் தண்ணீரை திறந்துவிடும் என்ற எதிர்பார்ப்பிலும், ஐந்து லட்சம் ஏக்கர் நிலத்தில் புழுதி அடித்து நேரடி விதைப்பு பணியை டெல்டா விவசாயிகள் மேற்கொண்டு விட்டனர்.

    குறுவை நேரடி நெல் விதைப்பு மேற் கொள்ளப்பட்டுள்ள நிலையில், நீரின்மை காரணமாக விதைகள் முளைக்காமலும்; நிலத்தடி நீர்மூலம் முளைப்பு கண்ட பயிர்கள் பாதிக்கும் நிலையில் உள்ளதாகவும்; கடைமடைப் பகுதிகளுக்கு இன்னும் தண்ணீர் சென்றடையவில்லை என்றும், இந்த நிலை நீடித்தால், லட்சக்கணக்கான ஏக்கரில் மேற்கொள்ளப்பட்டுள்ள நேரடி விதைப்பு பாதிக்கப்படும் என்றும், ஏக்கருக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் செலவு செய்துவிட்டு கவலையில் உறைந்து போயுள்ளது.

    உச்ச நீதிமன்றத் தீர்ப்பு மற்றும் காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பின்படி ஜூன் மாதத்தில் 9.1 டி.எம்.சி. அடி தண்ணீரையும், ஜூலை மாதத்தில் 31 டி.எம்.சி. அடி தண்ணீரையும் கர்நாடகம் திறந்துவிட வேண்டும். ஆனால், தண்ணீரை திறந்துவிட முடியாது என்றும், காவேரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டாலும் தண்ணீரை திறந்து விடுவது கஷ்டம் என்றும் கர்நாடக மாநில துணை முதலமைச்சர் பேசி இருக்கிறார்.

    தி.மு.க. அரசின் திட்டமின்மை காரணமாக, பணத்தை போட்டு நேரடி விதைப்பினை மேற் கொண்ட விவசாயிகள் மன முடைந்து இருக்கிறார்கள். தி.மு.க.வின் மெத்தனப் போக்கிற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×