search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் தொகுதிகள் இன்று முடிவாகிறது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் தொகுதிகள் இன்று முடிவாகிறது

    • கடந்த முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளில் 4 தொகுதிகளை தி.மு.க. எடுத்துக்கொள்ள விரும்புகிறது.
    • திருச்சி, ஆரணி, தேனி தொகுதிகளுக்கு பதிலாக வேறு தொகுதியை தேர்வு செய்யுமாறு காங்கிரசை தி.மு.க. கேட்டுக் கொண்டுள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு நடைபெற்று வருகிறது.

    இதில் காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. புதுச்சேரியில் காங்கிரஸ் போட்டியிடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள 9 தொகுதிகள் எவை என்று பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

    கடந்த முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளில் 4 தொகுதிகளை தி.மு.க. எடுத்துக்கொள்ள விரும்புகிறது. இதில் திருச்சி, ஆரணி, தேனி தொகுதிகளுக்கு பதிலாக வேறு தொகுதியை தேர்வு செய்யுமாறு காங்கிரசை தி.மு.க. கேட்டுக் கொண்டுள்ளது.

    கடலூர், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி, நெல்லை, கன்னியாகுமரி, திருவள்ளூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய தொகுதிகளை காங்கிரசுக்கு மீண்டும் ஒதுக்க தி.மு.க. சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

    இதனால் இன்று மாலை அல்லது நாளை காங்கிரசுக்கான தொகுதிகளை அடையாளம் காணும் பணி முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு அண்ணா அறிவாலயத்தில் ஒப்பந்தம் ஏற்படும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×