search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாராளுமன்ற தேர்தல்: தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு வினியோகம் தொடங்கியது
    X

    பாராளுமன்ற தேர்தல்: தி.மு.க. சார்பில் போட்டியிட விருப்ப மனு வினியோகம் தொடங்கியது

    • அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் வினியோகம் தொடங்கியது.
    • விருப்ப மனுவை பூர்த்தி செய்து கொடுக்கும்போது கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்கான தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி தொகுதி பங்கீடு தொடங்கியது. தீவிரமாக பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்கள்.

    தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்து உள்ள கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த முதல்கட்ட பேச்சுவார்த்தை நடந்து முடிந்து உள்ளது.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறுவதற்கான விண்ணப்ப படிவம் இன்று முதல் வழங்கப்படும் என்று பொதுச் செயலாளர் துரை முருகன் அறிவித்து இருந்தார்.

    அதன்படி இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் விருப்ப மனுக்கள் வினியோகம் தொடங்கியது. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, இணை செயலாளர் அன்பகம்கலை, துணை செயலாளர் ஆஸ்டின் ஆகியோர் விருப்ப மனு வினியோக பணியில் ஈடுபட்டனர்.

    முதல் நாளான இன்று திருநெல்வேலி, தஞ்சாவூர், கடலூர் மாவட்டங்களை சேர்ந்த தி.மு.க.வினர் 20 பேர் விருப்ப மனுக்கள் வாங்க வந்திருந்தனர். பகல் 12 மணிக்கு மேல் அவர்கள் ஒவ்வொருவராக விருப்ப படிவத்தினை ரூ.2 ஆயிரம் செலுத்தி வாங்கிச் சென்றனர்.

    விருப்ப மனுவை பூர்த்தி செய்து கொடுக்கும்போது கட்டணமாக ரூ.50 ஆயிரம் செலுத்த வேண்டும். விருப்ப மனுக்களை மார்ச் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி மாலை 6 மணிக்குள் தலைமை கழகத்தில் கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×