என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
2-வது கட்ட திட்டத்தில் கோயம்பேடு-ஆவடி இடையே மெட்ரோ ரெயிலை இயக்க திட்ட அறிக்கை: விரைவில் தயாரிக்க முடிவு
- புறநகர் பகுதிகளை மெட்ரோ ரெயில் சேவையுடன் இணைக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
- சிறுசேரி-கிளாம்பாக்கம், கோயம்பேடு-ஆவடி மெட்ரோ சேவைக்கான சாத்தியக்கூறு அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
சென்னை:
சென்னையில் இரண்டா வது கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் 3 வழித் தடங்களில் செயல்படுத்தப்படுகின்றன. 119 கி.மீ. நீளத்திற்கு நடக்கும் இந்த பணிகள் 2028-ம் ஆண்டுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து நெரிசல் இல்லாமல் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ய முடிவதால் பொதுமக்கள் நாளுக்கு நாள் அதிகளவில் பயணிக்கின்றனர். மேலும் புறநகர் பகுதிகளை மெட்ரோ ரெயில் சேவையுடன் இணைக்க மெட்ரோ ரெயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
அதன் அடிப்படையில் சிறுசேரி- கிளாம்பாக்கம், பூந்தமல்லி-பரந்தூர், கோயம்பேடு-ஆவடி ஆகிய பகுதிகளுக்கு மெட்ரோ ரெயில் சேவையை நீட்டிப் பது குறித்து சாத்தியக்கூறு அறிக்கை தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இதில் சிறுசேரி-கிளாம்பாக்கம், கோயம்பேடு-ஆவடி மெட்ரோ சேவைக்கான சாத்தியக்கூறு அறிக்கை விரைவில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.
இதையடுத்து விரிவான திட்ட அறிக்கை தயாரித்து இத்திட்டத்தை செயல்படுத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரிகள் கூறியதாவது:-
இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தில் பூந்தமல்லி-பரந்தூர் 50 கி.மீ., கோயம்பேடு-ஆவடிக்கு திருமங்கலம், முகப்பேர் வழியாக 17 கி.மீ., சிறுசேரி-கிளாம்பாக்கம் 26 கி.மீ. என மொத்தம் 93 கி.மீ. தூரத்திற்கு மெட்ரோ ரெயில் நீட்டிப்பு செய்ய சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடந்து வருகின்றன. பூந்தமல்லி- பரந்தூர் தடத்தில் சாத்தியக் கூறு பணிகள் தாமதம் ஆகிறது.
ஆனால் சிறுசேரி-கிளாம் பாக்கம், கோயம்பேடு-ஆவடி இடையே மெட்ரோ ரெயிலுக்கான சாத்தியக் கூறு பணிகள் முடிந்து உள்ளதால் 2 வாரங்களில் அரசிடம் ஒப்படைக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.