search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேனி அருகே சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல்
    X

    தேனி அருகே சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 2 பேருக்கு பன்றிக்காய்ச்சல்

    • கன்னிசேர்வைபட்டியைச் சேர்ந்த முதியவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதியானது.
    • கன்னிசேர்வைபட்டி, சின்னமனூரில் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகள் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது.

    உத்தமபாளையம்:

    தேனி மாவட்டத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த தொடர்ந்து தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இருந்தபோதும் மாவட்டத்தில் இன்புளுயன்சா, டெங்கு, டைபாய்டு, பன்றிக்காய்ச்சல் போன்றவை வேகமாக பரவி வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பழனிசெட்டிபட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு குரங்கம்மை நோய் ஏற்பட்டு மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

    இந்நிலையில் சின்னமனூர் அருகே கன்னிசேர்வைபட்டியைச் சேர்ந்த 62 வயது முதியவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் அவருக்கு பரிசோதனை செய்தபோது பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதியானது.

    இதே போல சின்னமனூரைச் சேர்ந்த 54 வயதுடைய தேனி எஸ்.பி. அலுவலகத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவருக்கு பன்றிக்காய்ச்சல் நோய் தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்கள் 2 பேரும் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இதனைத் தொடர்ந்து கன்னிசேர்வைபட்டி, சின்னமனூரில் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகள் சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. தொற்று கண்டறியப்பட்டவர்களின் உறவினர்கள் மற்றும் அவர்கள் வீட்டுக்கு அருகில் வசிப்பவர்களிடம் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

    அப்பகுதியில் ஏற்கனவே யாரேனும் இறந்துள்ளனரா? என்றும் விசாரித்து அதற்கான காரணங்களையும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×