search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு
    X

    தமிழகத்தில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்பு

    • நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்
    • மழையுடன் இடி-மின்னலும் 40 முல் 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    சென்னை:

    தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதுவரையில் இயல்பைவிட 125 சதவீதம் கூடுதலாக மழை பெய்துள்ளது. குறிப்பாக கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. காற்றின் திசை மாறுபாடு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். மழையுடன் இடி-மின்னலும் 40 முல் 50 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

    தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலை பகுதிகளில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்.


    திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப் பகுதிகள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.

    நாளை (27-ந்தேதி) நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். 28-ந்தேதி முதல் 2-ந்தேதி வரை தமிழகத்தில் மிதமான மழை பெய்யக் கூடும்.

    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மாலை அல்லது இரவு வேளையில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும். அதிகபட்ச வெப்ப நிலை 36 செல்சியசை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்ப நிலை 27-28 செல்சியசை ஒட்டியும் இருக்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×