என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 1,265 சிறப்பு பஸ்கள்
- தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து சென்னை திரும்ப 9-ந்தேதி 705 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
- வருகிற 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பயணம் செய்ய 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
சென்னை:
சுபமுகூர்த்தம், வார இறுதி நாட்களையொட்டி 7,8 மற்றும் 9-ந்தேதிகளில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 7-ந்தேதி 835 பஸ்களும் 8-ந்தேதி 570 பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருக்கு இந்த இரு நாட்களும் 160 பஸ்கள் இயக்கப்படுகிறது.
10-ந்தேதி பள்ளிக்கூடம் திறக்க இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து சென்னை திரும்ப 9-ந்தேதி 705 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த நிலையில் வருகிற 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பயணம் செய்ய 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். நீண்ட தூரம் பயணம் செல்லக்கூடியவர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.