search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அரும்பாக்கம் வங்கியில் 32 கிலோ நகைகள் கொள்ளை: போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் 3½ கிலோ நகைகள் சிக்கியது
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அரும்பாக்கம் வங்கியில் 32 கிலோ நகைகள் கொள்ளை: போலீஸ் இன்ஸ்பெக்டர் வீட்டில் 3½ கிலோ நகைகள் சிக்கியது

    • கொள்ளை கும்பலுக்கும், இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பு ஏற்பட்டது எப்படி? என்பது பற்றிய விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.
    • சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொள்ளை சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    சென்னை:

    அரும்பாக்கம் பெடரல் வங்கி கிளையில் 32 கிலோ தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொள்ளை சம்பவத்தில் 7 பேர் வரை ஈடுபட்டிருக்கலாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. நகைகள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் இந்த கொள்ளை வழக்கில் செங்கல்பட்டு மாவட்டத்துக்கு உள்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது. வங்கியில் கொள்யைடிக்கப்பட்ட நகைகளில் 3½ கிலோ நகை இன்ஸ்பெக்டரின் வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இதையடுத்து இன்ஸ்பெக்டரை சென்னை தனிப்படை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சென்னையில் வைத்து அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளையர்களிடம் இருந்து இன்ஸ்பெக்டர் நகைகளை வாங்கி தனது வீட்டில் பதுக்கி வைத்திருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து கொள்ளை கும்பலுக்கும், இன்ஸ்பெக்டருக்கும் தொடர்பு ஏற்பட்டது எப்படி? என்பது பற்றிய விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

    சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதுமே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய கொள்ளை சம்பவத்தில் இன்ஸ்பெக்டர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    Next Story
    ×