search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பரவனாறு வாய்க்கால் வெட்டும் பணி 70 சதவீதம் நிறைவு- ஓரிரு நாட்களில் பணிகள் முடிவடையும்
    X

    பரவனாறு வாய்க்கால் வெட்டும் பணி 70 சதவீதம் நிறைவு- ஓரிரு நாட்களில் பணிகள் முடிவடையும்

    • வாய்க்கால் வெட்டும் வளையமாதேவி பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
    • இன்னும் இரண்டொரு நாட்களில் பணிகள் முடிவடைந்து விடும் என கூறப்படுகிறது.

    சேத்தியாதோப்பு:

    கடலூர் மாவட்டம் நெய்வேலியில் உள்ள என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் விரிவாக்க பணிக்காக சேத்தியாதோப்பு அருகே உள்ள வளையமாதேவி கிராமத்தில் புதிய பரவனாறு வாய்க்கால் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

    பணிகள் தொடங்கிய 3-வது நாளில் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் என்.எல்.சி. ஆர்ச் கேட் முன்பு முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

    இதில் வன்முறை வெடித்தது. பல வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட பலரை போலீசார் கைது செய்தனர்.

    இதையொட்டி வாய்க்கால் வெட்டும் வளையமாதேவி பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பேரி கார்டுகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டது.

    தொடர்ந்து வாய்க்கால் வெட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்று 12-வது நாளாக பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக ராட்சத பொக்லைன் எந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

    மேலும் வாய்க்கால் கரைப்பகுதியில் சிமெண்ட் கட்டைகளும் அமைக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 70 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளது.

    இன்னும் இரண்டொரு நாட்களில் பணிகள் முடிவடைந்து விடும் என கூறப்படுகிறது. பணிகள் தொடங்கிய ஆரம்ப கட்டத்தில் பரபரப்பான சூழலில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

    தற்போது வளையமாதேவி, எறும்பூர், ஆணை வாரி, சேத்தியாதோப்பு குறுக்கு ரோடு உள்ளிட்ட பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×