search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு விமான கட்டணம் 2 மடங்கு அதிகரிப்பு
    X

    சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு விமான கட்டணம் 2 மடங்கு அதிகரிப்பு

    • கோயம்புத்தூர், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விமான பயணிகளுடைய எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
    • சென்னையில் இருந்து கோவா, டெல்லிக்கு ஒரு வழி டிக்கெட் கட்டணமாக ரூ.10 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    ஆலந்தூர்:

    கோடைகாலம் தொடங்கி விட்டது.விரைவில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட உள்ளதால் பொது மக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல திட்டமிட்டு வருகிறார்கள்.

    இந்த வாரத்தில் ஈஸ்டர் பண்டிகை மற்றும் அடுத்த வாரத்தில் 14-ந்தேதி முதல் 16-ந் தேதி வரை தமிழ் வருட பிறப்பு மற்றும் வழக்கமான விடுமுறை நாட்கள் வருகிறது. இதேபோல் 21-ந்தேதி முதல் 23-ந்தேதி வரை ரம்ஜான் பண்டிகை உள்ளிட்ட விடுமுறை நாட்கள் வர உள்ளன. இந்த விடுமுறை நாட்களில் சொந்த ஊர்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு செல்ல மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    இதையடுத்து சென்னையில் இருந்து மும்பை, கோவா, டெல்லி, அந்தமான், கொல்கத்தா, ஐதராபாத், புனே, டார்ஜிலிங், கோயம்புத்தூர், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு விமான பயணிகளுடைய எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    இந்த மாதத்துக்கான முன்பதிவு டிக்கெட்டுகள் பெரும்பாலான விமானங்களில் இறுதி கட்டத்தில் உள்ளன. கட்டணம் வழக்கத்தை விட 2 மடங்கு அதிகரித்து உள்ளது. கொரோனா நோய் தொற்று முடிவடைந்த பின்னர் தற்போது குறிப்பாக இந்த ஏப்ரல் மாத மத்தியில் ஒரே நாளில் சுமார் 4 லட்சம் பயணிகள் உள்நாட்டு விமான பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த மாத இறுதியில் சென்னையில் இருந்து கோவா, டெல்லிக்கு ஒரு வழி டிக்கெட் கட்டணமாக ரூ.10 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்துக்கு ரூ.5 ஆயிரம், அந்தமானுக்கு ரூ.9,500, மும்பைக்கு ரூ.8500 கட்டணமாக உள்ளன.

    Next Story
    ×