என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழகம் முழுவதும் பா.ம.க. கொடியேற்றி கொண்டாடுங்கள்... அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்
- எந்த ஓர் அரசியல் கட்சியின் நோக்கமும் ஆட்சியைப் பிடிப்பதாகத் தான் இருக்கும்.
- 2026-ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியமைக்க வேண்டும் என்ற இலக்கை அடைய உறுதியேற்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழ்நாட்டு அரசியலில் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவது பாட்டாளி மக்கள் கட்சி தான். பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்டதில் இருந்து இன்று வரையிலான 35 ஆண்டுகளில் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக 51 ஆவணங்களை வெளியிட்ட கட்சி பாட்டாளி மக்கள் கட்சி தான்.
தமிழ்நாட்டில் மக்களைப் பாதிக்கும் எந்த சிக்கலாக இருந்தாலும் அதற்கான முதல் குரல் பா.ம.க.விடம் இருந்து தான் ஒலிக்கும். பாட்டாளி மக்கள் கட்சியின் எதிர்ப்பால், தமிழக அரசால் திரும்பப்பெறப்பட்ட மக்கள் விரோத செயல்பாடுகள் ஏராளம். அதனால் தான் மக்கள் தங்களின் குரல்களை வெளிப்படுத்துவதற்காக பாட்டாளி மக்கள் கட்சியை தேடி வருகின்றனர். இதுவே பா.ம.க.வுக்கு கிடைத்த பெரும் வெற்றியாகும்.
எந்த ஓர் அரசியல் கட்சியின் நோக்கமும் ஆட்சியைப் பிடிப்பதாகத் தான் இருக்கும். இந்த இலக்கை நோக்கிய நமது பயணத்தின் வேகத்தை ஆய்வு செய்யவும், இலக்கை அடைவதற்காக மறு உறுதி ஏற்றுக் கொள்ளவும் உரிய நாள் தான் ஜூலை 16-ந்தேதியாகும். அந்த நாளில் பா.ம.க.வின் 36-ம் ஆண்டு விழாவை கட்சியினர் அனைவரும் சிறப்பாக கொண்டாட வேண்டும். 2026-ம் ஆண்டு தேர்தலில் ஆட்சியமைக்க வேண்டும் என்ற இலக்கை அடைய உறுதியேற்க வேண்டும்.
பாட்டாளி மக்கள் கட்சியின் ஆண்டு விழாவையொட்டி, வரும் 16-ந்தேதி சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல்வேறு இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து மக்களை சந்திக்க உள்ளேன். அதேபோல், தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் பாட்டாளி மக்கள் கட்சியின் கொடி ஏற்றப்பட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.