search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோயம்பேடு மார்க்கெட்டில் கேரட் விலை திடீர் உயர்வு: கிலோ ரூ.90-க்கு விற்பனை
    X

    கோயம்பேடு மார்க்கெட்டில் கேரட் விலை திடீர் உயர்வு: கிலோ ரூ.90-க்கு விற்பனை

    • வரத்து அதிகரிப்பால் அவரைக்காய், வெண்டைக்காய், புடலங்காய், கோவக்காய் ஆகிய காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • வரத்து குறைவு காரணமாக ஊட்டி கேரட், முருங்கைக்காய், முட்டை கோஸ் ஆகிய காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளது.

    போரூர்:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் இருந்து இன்று 500 லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு குவிந்துள்ளது.

    நள்ளிரவில் வழக்கம் போல விறுவிறுப்பாக தொடங்கிய காய்கறி விற்பனை பின்னர் அதிகாலையில் மார்கெட்டுக்கு வரும் சில்லரை வியாபாரிகள் வரத்து குறைந்ததால் மந்தமாகி போனது. வரத்து அதிகரிப்பால் அவரைக்காய், வெண்டைக்காய், புடலங்காய், கோவக்காய் ஆகிய காய்கறிகளின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

    அதேபோல் வரத்து குறைவு காரணமாக ஊட்டி கேரட், முருங்கைக்காய், முட்டை கோஸ் ஆகிய காய்கறிகளின் விலை அதிகரித்து உள்ளது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் தக்காளி ஒரு கிலோ ரூ.20-க்கும், ஊட்டி கேரட் கிலோ ரூ.90-க்கும், முருங்கைக்காய் கிலோ ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

    காய்கறி மொத்த விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்) :-

    தக்காளி-ரூ.15, நாசிக் வெங்காயம்-ரூ.20-ரூ.25வரை, ஆந்திரா வெங்காயம்-ரூ.12-ரூ.15வரை, சின்ன வெங்காயம்-ரூ.20-ரூ.40வரை, உருளைக்கிழங்கு-ரூ.22, உஜாலா கத்தரிக்காய்-ரூ.30, வரி கத்தரிக்காய்-ரூ.15, அவரைக்காய்-ரூ.20, வெண்டைக்காய்-ரூ.25, பீன்ஸ்-ரூ.40, ஊட்டி கேரட்-ரூ70, மாலூர் கேரட்-ரூ.35, பீட்ரூட்-ரூ.25, முட்டை கோஸ்-ரூ.25, முருங்கைக்காய்-ரூ.80, பீர்க்கங்காய்-25, வெள்ளரிக்காய்-ரூ.15, புடலங்காய்-ரூ.15, காராமணி-ரூ.15, முள்ளங்கி-ரூ15, சவ்சவ்-ரூ.10, நூக்கல்-ரூ.15, காலி பிளவர் ஒன்று-ரூ.15, குடை மிளகாய்-ரூ.30, பட்டை கொத்தவரங்காய்-ரூ.25,பன்னீர் பாகற்காய்-ரூ.30, கோவக்காய்-ரூ.20, பச்சை மிளகாய்-ரூ.20, இஞ்சி-ரூ.90.

    Next Story
    ×