search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மாற்றுத்திறனாளியை பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்ட கண்டக்டர் சஸ்பெண்டு
    X

    மாற்றுத்திறனாளியை பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்ட கண்டக்டர் சஸ்பெண்டு

    • நடத்துனர் முத்துக்குமார் சிபிராஜை கன்னத்தில் அறைந்து தாக்கி உள்ளார்.
    • மாற்றுத்திறனாளியை பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்ட நடத்துனர் முத்துக்குமாரை சஸ்பெண்ட் செய்து போக்குவரத்து பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    திருப்பூர்:

    திருப்பூர் வீரபாண்டி பகுதியைச் சேர்ந்தவர் சத்யராஜ். பானி பூரி கடை நடத்திவரும் இவர் 80 சதவீத பார்வை குறைபாடு உடையவர் .இவருக்கு தமிழக அரசின் சார்பில் இலவச பேருந்து பயண அட்டை வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் இவரை வழி நடத்த உடன் ஒருவர் செல்லவும் பயண அட்டையில் வசதி உள்ளது. இந்நிலையில் சத்யராஜ் தனது மனைவி மற்றும் 17 வயது மகனுடன் வீரபாண்டி பிரிவில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்ல மாநகர பேருந்தில் ஏறி உள்ளார். மனைவிக்கு பெண்களுக்கான இலவச பயணம் என்பதால் தனக்கும் தனது மகனுக்கும் இலவச பேருந்து பயண அட்டை உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    ஆனால் நடத்துனர் முத்துக்குமார், உங்கள் மனைவிக்கு தான் பாஸ் உள்ளது .மகனுக்கு பயண சீட்டு பெற வேண்டும் என தெரிவித்துள்ளார். ஆனால் தனக்கு உள்ள சலுகையை நீங்கள் எப்படி தடுக்க முடியும் என கேள்வி எழுப்பி உள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த நடத்துநர் 3 பேரையும் கீழே இறங்க சொல்லி உள்ளார். இதனை சத்யராஜின் 17 வயதான மகன் சிபிராஜ் வீடியோ எடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நடத்துனர் முத்துக்குமார் சிபிராஜை கன்னத்தில் அறைந்து தாக்கி உள்ளார். பாதிக்கப்பட்ட சத்யராஜ் இது குறித்து திருப்பூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதற்கிடையே மாற்றுத்திறனாளியை பஸ்சில் இருந்து கீழே இறக்கி விட்ட நடத்துனர் முத்துக்குமாரை சஸ்பெண்ட் செய்து திருப்பூர் மாவட்ட போக்குவரத்து பொது மேலாளர் உத்தரவிட்டுள்ளார்.

    Next Story
    ×