search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட வேண்டும்- அமைச்சர் அறிக்கை
    X

    புதிய வாக்காளர்களை சேர்க்கும் பணியில் மும்முரமாக ஈடுபட வேண்டும்- அமைச்சர் அறிக்கை

    • வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவும் தீவிர நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொள்ள வேண்டும்.
    • உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைவரும் இணைந்து இந்த பணியினை செய்து முடித்திட வேண்டும்.

    சென்னை:

    காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர், அமைச்சர் தா.மோ. அன்பரசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையம் 1.1.2024-ம் தேதியை தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு தமிழகத்தில் உள்ள வாக்காளர் பட்டியலை திருத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளது.

    வருகின்ற 2024-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி அன்று, 18 வயது நிறைந்தவர்களின் பெயர்களையும் - வாக்காளர் பட்டியலில் இதுவரை இடம் பெறாதவர்களின் பெயர்களையும், புதிதாக குடிபெயர்ந்து உள்ள வாக்காளர்களின் பெயர்களையும், தொகுதியில் இருந்து இடம் மாறியவர்கள் மற்றும் இறந்தவர்களின் பெயர்களை தற்போது உள்ள வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கவும் தீவிர நடவடிக்கைகளை மும்முரமாக மேற்கொள்ள வேண்டும்.

    இரண்டாம் கட்ட சிறப்பு முகாம் வருகிற 25-ந்தேதி (சனிக்கிழமை), 26-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் நடைபெறும் என்று தமிழக தேர்தல் ஆணையர் அறிவித்து உள்ளார்.

    எனவே, இந்த 2 நாட்கள் மாவட்டம் முழுவதும் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம்களில் வாக்காளர்களை சேர்க்கும் பணியிலும், அந்தந்த வாக்குச்சாவடிகளில் உள்ள வார்டு கிளை கழக செயலாளர்கள், வாக்குச்சவாடி நிலை முகவர்கள், வாக்குச்சாவடி தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைவரும் இணைந்து இந்த பணியினை செய்து முடித்திட வேண்டும்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்யும் பணி மிகவும் முக்கியமானது என்பதை கவனத்தில் கொண்டு அனைவரும் இணைந்து இப்பணியை செய்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×