என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மோசடி செய்த சென்னை நகைக்கடை உரிமையாளர்களின் வங்கி கணக்கில் இருந்த ரூ.78 லட்சம் முடக்கம்
- நகைக் கடை சார்பில் அதிக வட்டி தருவதாக கவர்ச்சி கரமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
- நகைக்கடை உரிமையாளர்கள் ராபின், ஆல்வின் ஆகிய இருவரையும் பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
சென்னை:
சென்னை நொளம்பூரில் இயங்கி வந்த ஏ.ஆர்.டி. நகைக் கடை சார்பில் அதிக வட்டி தருவதாக கவர்ச்சி கரமான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. ரூ.1 லட்சம் பணம் கட்டினால் ஒவ்வொரு வாரமும் ரூ.4 ஆயிரம் வட்டி தருவதாக கூறினார்கள். இதை நம்பி 400-க்கும் மேற்பட்டவர்கள் முதலீடு செய்தனர். ஆனால் அவர்கள் கூறியது போல் வட்டி கொடுக்கவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றினார்கள். இதையடுத்து பணம் கட்டி ஏமாந்தவர்கள் பொருளாதார குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர். இதையடுத்து தலைமறைவாக இருந்த நகைக்கடை உரிமையாளர்கள் ராபின், ஆல்வின் ஆகிய இருவரையும் பொருளாதார குற்றப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில் ஏ.ஆர்.டி. நகைக்கடை உரிமையாளர்கள் ராபின், ஆல்வின் ஆகியோரது வங்கி கணக்குகளை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் முடக்கி உள்ளனர். அவர்களது வங்கி கணக்கில் இருந்த ரூ.78 லட்சம் பணம் முடக்கப்பட்டுள்ளது.