என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
எடப்பாடி பழனிசாமியின் தஞ்சை பயணம் ரத்து
BySuresh K Jangir2 May 2023 7:28 AM GMT
- ஒரத்தநாட்டில் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்பதாக இருந்தது.
- தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்துவரும் நிலையில் நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. தலைமை செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி 4-ந்தேதி தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கபிஸ்தலம் கிராமம், அம்மா அரங்கத்தில், தஞ்சாவூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மறைந்த ரா. துரைக் கண்ணுவின் மார்பளவு வெண்கலச் சிலை திறப்பு விழாவிலும்; அதனைத் தொடர்ந்து ஒரத்தநாட்டில் நடைபெற இருந்த பொதுக்கூட்டம் உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளிலும் பங்கேற்பதாக இருந்தது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் தற்போது கனமழை பெய்துவரும் நிலையில், மேற்கண்ட நிகழ்ச்சிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டு வருகிற 15-ந் தேதி (சனிக்கிழமை) நடைபெறும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×