என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பள்ளிகளில் 3 திட்டங்களை செயல்படுத்த கல்வித்துறை முடிவு
- மாணவர்களின் தினசரி செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் பெற்றோருக்கான வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட உள்ளது.
- பள்ளி மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி இந்த திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை கொண்டு வர இருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை:
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு அனைத்து பள்ளிகளும் ஜூன் 6-ந்தேதி திறக்கப்படுகிறது. பள்ளிகள் திறக்கப்படுவதால் தூய்மைப் பணிகள், பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும் வருகிற கல்வியாண்டில் பல்வேறு திட்டங்களை புதிதாக செயல்படுத்தவும் திட்டமிடப்பட்டு உள்ளது.
பள்ளிக்கூடம் திறந்ததும் 3 திட்டங்களை செயல்படுத்த கல்வித்துறை முடிவு செய்து உள்ளது. மாணவர்கள் மத்தியில் போதைப் பொருள் நடமாட்டத்தை தடுக்கும் வகையில் புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கம் இருப்பதாகவும் அதுவும் பள்ளி வளாகத்திலேயே பயன்படுத்துவதாகவும் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்தனர். அதனை தடை செய்யும் வகையில் அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
இரண்டாவதாக ஒரு கோடியே 25 லட்சம் மாணவர்களின் தினசரி செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் வகையில் பெற்றோருக்கான வாட்ஸ்அப் குழு உருவாக்கப்பட உள்ளது.
இதன் மூலம் மாணவர்களின் செயல்பாடுகளை பெற்றோருக்கு தெரிவிக்க முடியும். இந்த திட்டத்தை செயல்படுத்தும் விதமாக 70 லட்சம் பெற்றோர்களின் எண்கள் இணைக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள பெற்றோர்களின் செல்போன் எண்களையும் பள்ளி திறந்ததும் இணைக்கப்படுகிறது.
மூன்றாவதாக மாணவர்கள் கையில் கட்டும் வண்ணக் கயிறுகளுக்கு தடை விதிக்கவும் ஆலோசிக்கப்படுகிறது. ஜாதி அடிப்படையில் கையில் வண்ணக் கயிறுகள் கட்டப்படுவதால் தென் மாவட்டங்களில் மாணவர்கள் இடையே மோதல் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் கையில் கட்டப்படும் வண்ணக் கயிறுகளுக்கு தடை கொண்டு வரும் உத்தரவும் பிறப்பிக்கப்படலாம் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பள்ளி மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு முதலமைச்சருடன் ஆலோசனை நடத்தி இந்த திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை கொண்டு வர இருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்