search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நொய்யல் ஆறு வெள்ளத்தில் சிக்கி தவித்த 4 வாலிபர்கள்: தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்
    X

    மீட்கப்பட்ட வாலிபர்களை படத்தில் காணலாம்.

    நொய்யல் ஆறு வெள்ளத்தில் சிக்கி தவித்த 4 வாலிபர்கள்: தீயணைப்பு வீரர்கள் கயிறு கட்டி மீட்டனர்

    • சாமளாபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றின் நடுவே 4 வாலிபர்கள் சிக்கி கொண்டதாக சூலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
    • நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

    திருப்பூர்:

    கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் சாமளாபுரம் பகுதியில் நொய்யல் ஆற்றின் நடுவே 4 வாலிபர்கள் சிக்கி கொண்டதாக சூலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 5மணி நேரம் போராடி கயிறு மூலம் 4 வாலிபர்களையும் பத்திரமாக மீட்டனர். அவர்கள் எதற்காக நொய்யல் ஆற்றுக்கு சென்றனர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மழையின் காரணமாக நொய்யல் ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்வதால் பொதுமக்கள் யாரும் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×