search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அதிகரிக்கும் தங்கம் விலை: சவரன் ரூ.42,600-க்கு விற்பனை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அதிகரிக்கும் தங்கம் விலை: சவரன் ரூ.42,600-க்கு விற்பனை

    • கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ. 760 அதிகரித்து இருக்கிறது.
    • 11-ந்தேதி பவுன் ரூ. 41,840-ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.43 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

    சென்னை:

    சென்னையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தங்கத்தின் விலை திடீரென உயர்ந்து வருகிறது.

    சென்ற மாதம் தொடக்கத்தில் பவுன் ரூ.39 ஆயிரமாக இருந்த தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது. இடையிடையே சற்று குறைந்தாலும் பவுன் 42 ஆயிரத்தை தாண்டி அதிர்ச்சி அளித்துள்ளது.

    நேற்று பவுன் ரூ.42,320 ஆக இருந்தது. இன்று இது ரூ.42,600 ஆக உயர்ந்தது. இன்று பவுன் ரூ.280 அதிகரித்து இருக்கிறது. கிராம் நேற்று ரூ.5,290-க்கு விற்பனை ஆனது. இன்று இது உயர்ந்து ரூ.5,325 க்கு விற்பனை ஆகிறது. இன்று கிராம் ஒரே நாளில் ரூ.35 உயர்ந்து இருக்கிறது.

    கடந்த 10 நாட்களில் மட்டும் தங்கம் பவுனுக்கு ரூ. 760 அதிகரித்து இருக்கிறது. 11-ந்தேதி பவுன் ரூ. 41,840-ஆக இருந்தது. இது படிப்படியாக உயர்ந்து தற்போது ரூ.43 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. பாதுகாப்பானது என கருதி முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வதால் விலை அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதனால் நகை வாங்க உள்ள பொதுமக்கள் குறிப்பாக நடுத்தர மக்கள் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளனர்.

    தங்கத்தை போலவே வெள்ளி விலையும் சற்று அதிகரித்து இருக்கிறது. கிராம் ரூ.73.50-ல் இருந்து ரூ.74.50 ஆகவும் கிலோ ரூ. 73,500-ல் இருந்து ரூ.74,500 ஆகவும் அதிகரித்து உள்ளது.

    Next Story
    ×