search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது
    X

    தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது

    • தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.45,200-க்கு விற்கப்படுகிறது.
    • வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.80.70-க்கு விற்கப்பட்டது.

    சென்னை:

    தங்கம் விலை கடந்த 10 நாட்களாகவே தொடர்ந்து அதிகரித்து வந்தது. கடந்த 28-ந்தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.44,080-க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு படிப்படியாக உயரத் தொடங்கியது.

    மறுநாள் 29-ந்தேதி ரூ.44,360 ஆக உயர்ந்தது. 30-ந்தேதி மேலும் அதிகரித்து ரூ.44,520 ஆனது. 31-ந்தேதி பவுன் ரூ.44,720 ஆக உயர்ந்தது. அதன்பிறகு 3 நாட்கள் மட்டும் குறைந்து காணப்பட்ட தங்கம் நேற்று முன்தினம் ரூ.44,800 ஆக அதிகரித்தது.

    நேற்று பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.45 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.45,520-க்கு விற்கப்பட்டது.

    இந்த நிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இன்று பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.45,200-க்கு விற்கப்படுகிறது. ஆனாலும் பவுன் ரூ.45 ஆயிரத்துக்கு மேலேயே நீடிக்கிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.5,690-க்கு விற்கப்பட்டது. இன்று பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,650-க்கு விற்கப்படுகிறது.

    இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.80.70-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.80-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.80 ஆயிரத்துக்கு விற்பனையாகிறது.

    Next Story
    ×