என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் வேலை வாய்ப்பை வழங்கும் வகையில் தொழில் முதலீடுகளை ஈர்த்திட அரசு முயற்சி மேற்கொள்கிறது- அமைச்சர் பேச்சு
- பல்வேறு உலகளாவிய தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள்.
- கொள்கைகளின் அடிப்படையிலான அரசு மற்றும் நிர்வாகத்துக்கு அரசு உறுதியாக உள்ளது.
சென்னை:
உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற உள்ளது.
இது தொடர்பாக தமிழ் நாடு அரசு முதலீட்டாளர்களை சந்தித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக மும்பை மாநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பல்வேறு தொழில் துறை சார்ந்த தலைவர்கள் மற்றும் முதலீட்டாளர்களை சந்தித்து கலந்துரையாடினார்.
"தொலைநோக்கு பார்வை, தலைசிறந்த தலைமை மற்றும் சிறப்பாக செயல்படும் ஆட்சியின் மூலம், பல்வேறு உலகளாவிய தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய விரும்புகிறார்கள். தமிழ்நாட்டில் முதலீடு என்பது, வளர்ச்சிக்கு ஒரு உத்திரவாதம். திறமையான மனித வளம், முற்போக்கு கொள்கைகள், நிலையான வளர்ச்சி மற்றும் அனைவருக்கும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு இந்த அரசு முக்கியத்துவம் அளிக்கிறது.
வாகனங்கள் தயாரிப்பு மின்சார வாகனங்கள் தயாரிப்பு, உலகளாவிய திறன் மையங்கள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உதிரி பாகங்கள் உற்பத்தி மற்றும் மருத்துவ கருவி தயாரிப்பு போன்ற துறைகளில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக விளங்குகிறது.
அனைத்து துறைகள் மற்றும் மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சீரான வளர்ச்சி கொண்டு செல்வது தான் அரசின் நோக்கம். கொள்கைகளின் அடிப்படையிலான அரசு மற்றும் நிர்வாகத்துக்கு அரசு உறுதியாக உள்ளது.
ஜனவரியில் நடைபெற உள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு, மாநிலத்தின் திறன்கள் மற்றும் ஆற்றல்களை எடுத்துக் காட்ட ஒரு சிறந்த வாய்ப்பாகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உயர் தொழில்நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்த்திடுவது மட்டு மல்லாமல், பெருமளவில் வேலைவாய்ப்பு அளித்திடும் தொழில் முதலீடுகளையும் ஈர்த்திட அரசு முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது.