search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குரங்கு அம்மை பரவலை தடுக்க உடுமலை தமிழக-கேரள எல்லையில் சுகாதார குழுவினர் சோதனை
    X

    குரங்கு அம்மை பரவலை தடுக்க உடுமலை தமிழக-கேரள எல்லையில் சுகாதார குழுவினர் சோதனை

    • பிற நாடுகளை அச்சுறுத்தி வந்த குரங்கு அம்மை கேரளா வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தது.
    • வெளிநாடுகளில் இருந்து வருவோர் உடல் நலம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

    உடுமலை:

    பிற நாடுகளை அச்சுறுத்தி வந்த குரங்கு அம்மை கேரளா வழியாக இந்தியாவுக்குள் நுழைந்தது. உலக சுகாதார நிறுவனம் குரங்கு அம்மை தொற்றுநோய் தொடர்பாக அவசர நிலை அறிவித்துள்ளது. இதையடுத்து மத்திய அரசு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளது.

    தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியம், அண்டை மாநில எல்லைகள், சர்வதேச விமான போக்கு வரத்து நிலையங்கள் கண்காணிப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து வருவோர் உடல் நலம் குறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

    இந்நிலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த ஒன்பதாறு சோதனை சாவடி (தமிழக - கேரள எல்லை) கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. டாக்டர், செவிலியர், சுகாதாரத்துறை ஊழியர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது.

    கேரளாவில் இருந்து தமிழகம் வருவோர் குறித்த விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது.இது குறித்து, திருப்பூர் மாவட்ட சுகாதார பணிகள் துறை துணை இயக்குனர் ஜெகதீஷ்குமார் கூறியதாவது:-

    கேரளா எல்லை, ஒன்பதாறு சோதனைச் சாவடியில் சுகாதாரத்துறை குழு கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது. ஆப்பிரிக்க நாட்டில் இருந்து வந்தவர்களாக இருப்பினும் அவர்கள் விபரம் பெறப்பட்டு, 21 நாட்கள் உடல்நிலை குறித்து கேட்டறியப்படுகிறது.

    பிற நாடுகளில் இருந்து வருவோர் பெயர், முகவரி, விபரங்கள் பெறப்படுகிறது. வெளிநாடு சென்று திரும்புவோர் ஏதேனும் உடல் நலக்குறைபாடு இருந்தால் தெரிவிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×