என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை அறிக்கை கசிந்தது எப்படி?- ஜெயக்குமார் கேள்வி
- அருணா ஜெகதீசன் அறிக்கையில் என்னென்ன உள்ளது என்பது பற்றி ஒரு ஆங்கில இதழ் வெளியிட்டுள்ளது.
- ஆங்கில ஏட்டிற்கு ஆட்சியாளர்களே தகவலை கசியவிட்டார்களா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
சென்னை:
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு பற்றி விசாரித்து அரசுக்கு அறிக்கை அளிக்க 2018-ல் ஜெயலலிதாவின் அரசுதான் ஆணையம் அமைத்தது. அதே நேரத்தில், ஆணையத்தின் இறுதி அறிக்கை கடந்த மே மாதமே சீல் இடப்பட்ட உறையில் வைத்து ரகசிய அறிக்கையாக இந்த அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை 3,000 பக்கங்களைக் கொண்டது என்றும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் இந்த அறிக்கையில் என்ன பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்று யாருக்கும் தெரியாது. அரசும் இதுவரை வெளியிடவில்லை. ஆனால் அருணா ஜெகதீசன் அறிக்கையில் என்னென்ன உள்ளது என்பது பற்றி ஒரு ஆங்கில இதழ் வெளியிட்டுள்ளது. அந்த ஆங்கில ஏட்டிற்கு ஆட்சியாளர்களே தகவலை கசியவிட்டார்களா? என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.