search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்: தமிழக காங்.தலைவராக அழகிரி திறம்பட பணியாற்றுகிறார்- தளபதி பாஸ்கர்
    X

    தேவையில்லாத குழப்பத்தை ஏற்படுத்துகிறார்கள்: தமிழக காங்.தலைவராக அழகிரி திறம்பட பணியாற்றுகிறார்- தளபதி பாஸ்கர்

    • தமிழக காங்கிரசை திறம்பட நடத்தி வரும் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு உண்மை காங்கிரஸ் தொண்டர்கள் என்றும் பக்க பலமாக இருப்போம்.
    • விஷமிகள் தலைவரை இன்று மாற்றி விடுவார்கள் நாளை மறுநாள் மாற்றி விடுவார்கள் என்று அரசியலாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் மாநில பொதுச்செயலாளர் தளபதி பாஸ்கர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்று நாலரை ஆண்டு காலத்தில் சட்ட மன்றத் தேர்தல் பாராளுமன்ற தேர்தல் உள்ளாட்சி மன்றத் தேர்தல் ஆகியவற்றில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து அதிக இடங்களை பெற்று மாபெரும் வெற்றியை கட்சிக்கு பெற்று தந்திருக்கிறார்.

    அவர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் நன்மதிப்பை பெற்றுள்ளார். இந்த நேரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரை மாற்ற வேண்டும் என்று ஒரு பிரிவினர் டெல்லியை நோக்கி படையெடுத்துக் கொண்டு உள்ளனர் இவர்களுக்கு எல்லாம் நான் கேட்கும் ஒரே கேள்வி என்ன வென்றால் மத்தியில் ஆளும் பிஜேபி அரசை எதிர்த்து கேள்வி கேட்பவர்கள் எல்லாரையும் நசுக்கி வருகின்றது அதானிக்கும் அம்பானிக்கும் பொது மக்கள் பணத்தை தாரை வார்த்து கொடுத்தார்கள் என்று பாராளுமன்றத்தில் முறையாக கேள்வி கேட்டு பாராளுமன்றத்தை முடக்கிய நேரத்தில் தலைவர் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை பறித்து அவர் வாழும் வீட்டை பறித்து வீதிக்கு அனுப்பினார்கள்.

    அடுத்த ஆண்டு வரும் பாராளுமன்ற தேர்தலில் இவர்கள் மீண்டும் மத்தியில் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது இந்த சூழ்நிலையில் வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் ஆளும் பி.ஜே.பி. அரசை வீழ்த்தியே ஆக வேண்டும் என்று அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்று கூடி ஆலோசனை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

    ஆனால் விஷமிகள் தலைவரை இன்று மாற்றி விடுவார்கள் நாளை மறுநாள் மாற்றி விடுவார்கள் என்று அரசியலாக செய்து கொண்டிருக்கிறார்கள்.

    தமிழக காங்கிரசை திறம்பட நடத்தி வரும் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கு உண்மை காங்கிரஸ் தொண்டர்கள் என்றும் பக்க பலமாக இருப்போம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×