என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
காங்கிரஸ் செத்துப்போன பாம்பு... கடுமையாக சாடிய குஷ்பு
- வார்த்தைகளை நீங்கள் தவறாக எடுத்துக்கொண்டால் நான் என்ன செய்ய முடியும்?
- குஷ்புவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் விளம்பர வெளிச்சம் தேடலாம் என்று எனக்கு எதிராக போராட்டம் நடத்துகிறீர்கள்.
சென்னை:
நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் பேசிய வார்த்தைகள் சர்ச்சையானது. இதற்கிடையில் எக்ஸ் தளத்தில் ஒருவர் குஷ்புவை டேக் செய்து விமர்சித்து இருந்தார்.
அதற்கு பதில் அளித்து குஷ்பு வெளியிட்ட பதிவில் உங்கள் சேரி மொழியில் என்னால் பேச முடியாது என்று குறிப்பிட்டு இருந்தார்.
அவர் சேரி மொழி என்று குறிப்பிட்ட வார்த்தையை மட்டும் கையில் எடுத்து காங்கிரஸ் எஸ்.சி. துறை அவருக்கு எதிராக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது. இதனால் அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக குஷ்பு ஆவேசமாக பல்வேறு கேள்விகளை எழுப்பினார். இதுபற்றி அவர் கூறியதாவது:-
இந்த மாதிரி போராட்ட பூச்சாண்டிக்கெல்லாம் பயந்தவள் நான் அல்ல. தைரியம் தான் என் பெயர் என்று பலமுறை கூறி இருக்கிறேன்.
சேரி மொழி என்ற ஒற்றை வார்த்தையை பிடித்துக் கொண்டு எனக்கு எதிராக வரிந்து கட்டுகிறார்களே முதலில் சேரி என்றால் என்ன என்பதற்கு அவர்கள் விளக்கம் அளிக்கட்டும். அரசின் பதிவுகளில் கூட சேரி என்ற வார்த்தை இருக்கிறதே?.
வேளச்சேரி, நெமிலிச்சேரி, கூடுவாஞ்சேரி எத்தனையோ ஊர்களின் பெயர்களில் சேரி இருக்கிறதே அதை என்ன சொல்வீர்கள்? அங்கு வசிப்பவர்கள் எல்லோருடனும் சரி சமமாக வாழ தகுதியற்றவர்களா?
வார்த்தைகளை நீங்கள் தவறாக எடுத்துக்கொண்டால் நான் என்ன செய்ய முடியும்?
ஒரு பெண்ணான என்னை மேடையிலேயே எவ்வளவு கேவலமாக தி.மு.க.வினர் பேசினார்கள். அப்போது தி.மு.க.வுக்கு எதிராக பேசினீர்களா? அவர்கள் வீட்டு வாசலில் சென்று போராடினீர்களா?
நீட் தேர்வால் மாணவி அனிதா இறந்த போது குஷ்பு எங்கே போனார்? என்று கேட்கும் உண்மையான காங்கிரஸ்காரர்களே அது நடந்தது 2017-ல் நானும் அப்போது உண்மை தெரியாமல் உங்களோடு காங்கிரசில் தான் இருந்தேன். இது கூடவா மறந்து போச்சு?
இன்னும் தி.மு.க.வோடு சேர்ந்து நீட்... நீட் என்று நீட்டி முழங்குகிறீர்களே, நீட்டை ஒழிக்க முடியாது என்று நளினி சிதம்பரம் சுப்ரீம் கோர்ட்டு வாசலில் நின்று உரக்க சொன்னாரே அப்போது ப.சிதம்பரத்தை எதிர்த்து போராடினீர்களா? உருவ பொம்மையை எரித்தீர்களா? தமிழ்நாட்டுக்கு எதிராக இருக்கிறீர்கள் என்றாவது பேசினீர்களா?
தேர்தலில் வெற்றி பெற்றும் தலித் பஞ்சாயத்து தலைவர் இன்னும் பதவிப் பிரமாணம் கூட செய்ய முடியாமல் இருக்கிறாரே அதற்காக என்ன செய்தீர்கள்?
புதுக்கோட்டையில் தலித்துகள் பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் மலம் கலந்தார்களே இதுவரை அதற்கு என்ன செய்தீர்கள்?
நாங்குனேரியில் தலித் மாணவர்கள் படிக்க முடியாத சூழ்நிலை உருவாக்கப்படுகிறதே அதை எதிர்த்து காங்கிரஸ் போராடியதா? அல்லது தடுப்பதற்கு தி.மு.க. ஏதாவது செய்ததா? வேடிக்கைதானே பார்த்துக் கொண்டிருக்கிறது?
விளை நிலத்தில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய விவசாயிகள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்கள். போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பெண்மணி ஒருவர் இறந்து போன தனது குழந்தையின் 16-வது நாள் காரியத்தை முடிக்க வேண்டும் என்று கெஞ்சிய போதும் இரக்கமில்லாமல் தானே இந்த அரசு நடந்து கொண்டது. அதற்காக முதலமைச்சர் வீட்டு வாசலுக்கு சென்று நியாயம் கேட்டீர்களா?
தலித்துக்களுக்கு ஆதரவாக இப்போது பொங்கும் காங்கிரசின் வரலாறு தெரியாதா?
தலித் இனத்தை சேர்ந்த ஜெகஜீவன்ராம் பிரதமர் ஆக தகுதியில்லை என்று புறக்கணித்தது மறந்து போனதா?
மலைவாழ் சமூகத்தை சேர்ந்த திரவுபதி முர்மு ஜனாதிபதியாக வரக்கூடாது என்று எதிர்த்து வேட்பாளரை நிறுத்தியது தானே காங்கிரசும், தி.மு.க.வும்.
ராஷ்ட்ரபதி முர்முவை ராஷ்ட்ர பத்னி என்று காங்கிரஸ் தலைவர் விமர்சித்தார். பின்னர் நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை என்றார். அப்போது ஏன் பொங்கவில்லை?
இந்தியாவில் அதிக அளவாக தலித்துகளுக்கு எதிரான வழக்குகள் தமிழகத்தில் பதிவாகி உள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து இதுவரை 450 வழக்குகள் பதிவாகி இருப்பதாக தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தெரிவித்துள்ளது.
குஷ்புவுக்கு எதிராக போராட்டம் நடத்தினால் விளம்பர வெளிச்சம் தேடலாம் என்று எனக்கு எதிராக போராட்டம் நடத்துகிறீர்கள். காங்கிரஸ் செத்துப்போன பாம்பு. அது எழுந்து ஆடினால் என்ன? ஆடாவிட்டால் என்ன?
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்