என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
எம்.ஜி.ஆர். நகரில் வேனில் ரேசன் அரிசி கடத்திய 2 பேர் கைது
- ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
- ரேசன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
போரூர்:
சென்னை, எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் இருந்து ரேஷன் அரிசி ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை டி.எஸ்.பி சம்பத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து சப் - இன்ஸ்பெக்டர் ராஜா பாரதிதாசன் தலைமையிலான போலீசார் ஜாபர்கான் பேட்டை காசி தியேட்டர் அருகே தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியே வந்த வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ஏராளமான ரேஷன் அரிசி மூட்டைகள் பதுக்கி கடத்தி வந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து ரேசன் அரிசி கடத்தலில் ஈடுபட்ட கொடுங்கையூரை சேர்ந்த கமல்கிஷோர் (26), வியாசர்பாடியை சேர்ந்த மணி கண்டன் (23) ஆகிய 2பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1600 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மீது உணவுப் பொருள்கள் பதுக்கல் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.