என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
விவசாயிகளின் தேவைகளை கேட்டறிந்த பின்னர்தான் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது- அமைச்சர்
- பயிர் செய்யப்படும் கேழ்வரகு நேரடியாக விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ 35 ரூபாய் 78 பைசாவிற்கு என்ற அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது.
- 40 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் சாப்பிட்ட உணவுகளை இன்று உலகம் முழுவதும் கடைபிடித்து வருகின்றனர்.
தருமபுரி:
தருமபுரி அடுத்த மதிகோண்பாளையம் வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூட வளாகத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் ராகி நேரடி கொள்முதல் நிலைய திறப்பு விழா கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேரடி கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து விவசாயிகளுக்கு ராகி சான்று விதைகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:-
முதல் கட்டமாக நீலகிரி மற்றும் தருமபுரி மாவட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இரண்டு கிலோ கேழ்வரகு வழங்க அரசு அனுமதி அளித்ததையடுத்து தருமபுரியில் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் இம்மாதிரியான கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் 2646 எக்டேர் கேழ்வரகு பயிர் செய்யப்படுகிறது. அவ்வாறு பயிர் செய்யப்படும் கேழ்வரகு நேரடியாக விவசாயிகளிடமிருந்து ஒரு கிலோ 35 ரூபாய் 78 பைசாவிற்கு என்ற அடிப்படையில் கொள்முதல் செய்யப்படுகிறது. 40 ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் சாப்பிட்ட உணவுகளை இன்று உலகம் முழுவதும் கடைபிடித்து வருகின்றனர்.
விவசாய நிதி நிலை அறிக்கை தயார் செய்யும் பொழுது விவசாயிகளை கேட்டறிந்து அவர்களின் தேவைகளின் அடிப்படையில் நிதிநிலை அறிக்கையை தயார் செய்ய வேண்டும் என முதல்-அமைச்சர் வலியுறுத்தியதை பேரில் கடந்த இரண்டு நிதிநிலை அறிக்கையை தயார் செய்ததாக கூறினார்.