என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கொளத்தூர் பாலாஜி நகர் பகுதியில் மழைநீர் வெளியேற்றும் பணிகளை அமைச்சர் ஆய்வு
- சாலைகளை தூய்மைப்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
- என்.டி. தமிழ்ச்செல்வன். என்.ராமச்சந்திரன், முருகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை:
இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நேற்று மாநகராட்சி மத்திய மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற பருவமழை முன்னேற்பாடு பணிகள் தொடர்பான அனைத்துத்துறை அலுவலர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் அறிவுறுத்திய படி, கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்தார்.
நோய்த் தொற்று ஏற்படாமல் பாதுகாத்திடும் வகையில் பாலாஜி நகரைச் சேர்ந்த நேர்மை நகரில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமினை பார்வையிட்ட பின், பாலாஜி நகர் பிரதான சாலை, குமரன் நகர், திருப்பதி நகர், வளர்மதி நகர் ஆகிய பகுதிகளில் மழைநீர் வெளியேற்றப்படும் பணிகளையும், சாலைகளை தூய்மைப்படுத்தும் பணிகளையும் பார்வையிட்டு அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். அதனைத் தொடர்ந்து அக்பர் ஸ்கொயர் பகுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவினை வழங்கினார்,
இந்த ஆய்வின் போது நகர் ஊரமைப்பு இயக்குநர் பா.கணேசன், மாநகராட்சி மத்திய மண்டல துணை ஆணையர் கே.ஜே.பிரவீன் குமார், மண்டலக் குழுத் தலைவர் சரிதா மகேஷ் குமார், பா. முரளீதரன், ஏ. நாகராஜன், கே.சந்துரு, சி.மகேஷ்குமார், என்.டி. தமிழ்ச்செல்வன். என்.ராமச்சந்திரன், முருகன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.