search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு லிப்ட் வசதி
    X

    பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் பயணிகளுக்கு லிப்ட் வசதி

    • பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் ரூ.80 லட்சம் செலவில் பயணிகள் வசதிக்காக 2 லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது.
    • சென்னை கோட்டத்தில் 21 ரெயில் நிலையங்களில் தற்போது 40 லிப்ட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை ரெயில்வே கோட்டத்தில் உள்ள முக்கிய ரெயில் நிலையங்களில் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.

    பழமையான ராயபுரம் ரெயில் நிலையம், பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையங்களில் பயணிகள் பாதுகாப்பு மற்றும் அடிப்படையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

    பேசின் பிரிட்ஜ் ரெயில் நிலையத்தில் ரூ.80 லட்சம் செலவில் பயணிகள் வசதிக்காக 2 லிப்ட் வசதி செய்யப்பட்டுள்ளது.

    இந்த 2 புதிய லிப்ட் மூலம் பயணிகள் எளிதாக நடை மேடைக்கு செல்லவும், அங்கிருந்து நடை மேம்பாலத்திற்கு போகவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

    2-வது மற்றும் 3-வது பிளாட்பாரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த லிப்ட் மூலம் 6 மற்றும் 7-வது பிளாட்பாரப் பயணிகள் இணைக்கப்படுகிறார்கள்.

    நடை மேம்பாலத்திற்கு எளிதாக செல்வதற்கும், பிளாட்பாரத்திற்கு செல்லவும் லிப்ட் வசதி பாலமாக அமைந்துள்ளது.

    புதிய லிப்ட் வசதி நேற்று முதல் பயணிகள் பயன் பாட்டிற்கு வந்துள்ளது. பயணிகள் மகிழ்ச்சியுடன் நடை மேடையை பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.

    புறநகர் மின்சார ரெயில் பயணிகள் இதுவரையில் சற்று தூரம் நடந்து சென்று கடக்க வேண்டிய நிலை இருந்தது. புதியதாக லிப்ட் வசதி ஏற்படுத்தியவுடன் மிக எளிதாக 6,7 நடை மேடைக்கு செல்ல முடிகிறது.

    சென்னை கோட்டத்தில் 21 ரெயில் நிலையங்களில் தற்போது 40 லிப்ட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.18 ரெயில் நிலையங்களில் 55 நகரும் படிக்கட்டுகள் செயல்பட்டு வருகின்றன.

    செங்கல்பட்டு மற்றும் அரக்கோணம் ரெயில் நிலையங்களில் கூடுதலாக 2 நகரும் மின் படிக்கட்டுகள் இந்த நிதியாண்டுக்குள் அமைக்கப்பட்டு விடும் என்று ரெயில்வே துறை தெரிவித்துள்ளது.

    இதேபோல எழும்பூர், வில்லிவாக்கம், அம்பத்தூர், கொரட்டூர், திருநின்றவூர், குரோம்பேட்டை, பொன்னேரி, வண்ணாரப்பேட்டை, ராயபுரம் ரெயில் நிலையங்களில் புதிதாக லிப்ட் வசதி அமைக்கும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×