என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு குப்பைகளுடன் மனு கொடுக்க வந்த பொதுமக்களால் பரபரப்பு
- விவசாயம் செய்து வருபவர்கள் வளர்க்கும் ஆடு, மாடுகள் நீர் நிலைப்பாதைகளில் கொட்டி இருக்கும் தேவையற்ற கழிவுகளை உண்டு நோய்வாய்ப்பட்டு இறக்கின்றன.
- பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் குப்பைகள் கொட்டுவதை நிறுத்தாததால், பல்லடம் தாலுகா சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா அலுவலகத்திற்கு, சமூக ஆர்வலர் கூட்டமைப்பு தலைவர் அண்ணாதுரை தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனு கொடுக்க வந்தனர். இதில் சிலர் குப்பைகளுடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் தாசில்தார் ஜீவா மற்றும் அதிகாரிகளை சந்தித்து கரைப்புதூர் ஊராட்சி குப்பை கிடங்கை அகற்றக்கோரி நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அப்புறப்படுத்தவில்லை. எனவே உடனடியாக குப்பை கிடங்கை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பல்லடம் அருகே உள்ள கரைப்புதுார் பஞ்சாயத்து நிர்வாகத்தினர் கரைப்புதூர் - உப்பிலிபாளையம் செல்லும் ரோட்டில் உள்ள நீர்நிலை முழுவதிலும் குப்பைகள், கழிவுகளைக் கொட்டி வருகின்றனர். ஊருக்குள் இருக்கும் அனைத்து கழிவுகளையும் கொண்டு வந்து மேற்படி நீர் நிலைப்பாதையில் கொட்டி வருகிறார்கள். இதனால் அந்தப் பகுதி மிகவும் அசுத்தம் ஏற்பட்டு சுகாதாரக்கேடு நிறைந்த பகுதியாக காட்சியளிக்கிறது. மேலும் அந்தப் பகுதியில் குடியிருப்போருக்கும் சுகாதாரமற்ற சூழல் ஏற்பட்டு நோய்வாய்ப்படும் ஆபத்தும் ஏற்பட்டுள்ளது.
விவசாயம் செய்து வருபவர்கள் வளர்க்கும் ஆடு, மாடுகள் நீர் நிலைப்பாதைகளில் கொட்டி இருக்கும் தேவையற்ற கழிவுகளை உண்டு நோய்வாய்ப்பட்டு இறக்கின்றன. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திற்கு புகார் அளித்தும் குப்பைகள் கொட்டுவதை நிறுத்தாததால், பல்லடம் தாலுகா சமூக ஆர்வலர் கூட்டமைப்பு சார்பில், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் 8 வாரங்களுக்குள் குப்பைகளை அகற்ற வேண்டும் என திருப்பூர் மாவட்ட நிர்வாகம், கரைப்புதூர் பஞ்சாயத்து நிர்வாகம் உள்ளிட்ட அரசு துறைகளுக்கு உத்தரவிட்டது. ஆனால் 8 வாரங்கள் ஆகியும் குப்பைகளை அகற்றாமல், மீண்டும் அதே இடத்தில் குப்பைகளை கொட்டி வருகின்றனர். எனவே உயர்நீதிமன்ற உத்தரவிற்கு கட்டுப்பட்டு குப்பைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூற ப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்