search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கருக்கா வினோத்தை 15 நாட்கள் காவலில் எடுக்க போலீசார் மனு: சைதாப்பேட்டை கோர்ட்டில் திங்கட்கிழமை விசாரணை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    கருக்கா வினோத்தை 15 நாட்கள் காவலில் எடுக்க போலீசார் மனு: சைதாப்பேட்டை கோர்ட்டில் திங்கட்கிழமை விசாரணை

    • பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார் என்பது பற்றிய விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர்.
    • கருக்கா வினோத்திடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அவரை காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    சென்னை:

    கிண்டி கவர்னர் மாளிகை வாசல் முன்பு பெட்ரோல் குண்டுகளை வீசிய வழக்கில் ரவுடி கருக்கா வினோத் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    ரவுடி கருக்கா வினோத்தின் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தின் பின்னணியில் இருப்பவர்கள் யார்-யார் என்பது பற்றிய விசாரணையை போலீசார் தீவிரப்படுத்தி உள்ளனர். இது தொடர்பாக கருக்கா வினோத்திடம் விசாரணை நடத்த வேண்டியிருப்பதால் அவரை காவலில் எடுக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    கருக்கா வினோத்தை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனு மீதான விசாரணை நாளை மறுநாள் (30-ந் தேதி) நடைபெற உள்ளது.

    அன்றுதான் கருக்கா வினோத்துக்கு எத்தனை நாட்கள் போலீஸ் காவல் கிடைக்கும் என்பது தெரியும்.

    Next Story
    ×