என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
3-வது தவணையாக 4-ந்தேதி போலியோ சொட்டு மருந்து: சுகாதாரத்துறை ஏற்பாடு
- ஆண்டுக்கு 10 லட்சம் கர்ப்பிணிகளுக்கும் 9 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன.
- பிறந்த குழந்தைகளுக்கு இரு தவணைகளாக 6-வது வாரத்திலும், 14-வது வாரத்திலும் போலியோ தடுப்பூசி வழங்கப்படுகிறது.
சென்னை:
தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் போலியோ 3-வது தவணை தடுப்பூசி வழங்கும் திட்டம் தமிழகத்தில் வரும் 4-ந்தேதி தொடங்கப்பட உள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்தார்.
அதன்படி அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதில் முதன்மை மாநிலமாக தமிழகம் விளங்கி வருகிறது. குறிப்பாக குழந்தைகளுக்கும், கர்ப்பிணிகளுக்கும் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
ஆண்டுக்கு 10 லட்சம் கர்ப்பிணிகளுக்கும் 9 லட்சம் குழந்தைகளுக்கும் தடுப்பூசிகள் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகின்றன. பிறந்த குழந்தைகளுக்கு இரு தவணைகளாக 6-வது வாரத்திலும், 14-வது வாரத்திலும் போலியோ தடுப்பூசி வழங்கப்படுகிறது.
இதை தவிர போலியோ இல்லாத மாநிலமாக தமிழகம் உருவெடுத்தாலும் முன் எச்சரிக்கையாக பிறந்த குழந்தைகளுக்கு 9-ல் இருந்து 12 மாதங்களுக்குள் 3-ம் தவணையாக போலியோ சொட்டு மருந்து வழங்க மத்திய அரசு முடிவு செய்தது.
அதன் அடிப்படையில் தமிழகத்தில் வரும் 4-ந்தேதி முதல் வழக்கமான தடுப்பூசிக்காக வரும் குழந்தைகளுக்கு தகுதியின் அடிப்படையில் 3-ம் தவணை போலியோ சொட்டு மருந்து வழங்க வேண்டும். இதற்கான நடவடிக்கைகளை மாவட்ட சுகாதார அலுவலர்கள் முன்னெடுக்க வேண்டும்
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.