search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜிப்மர் மருத்துவமனை குழு ஆய்வு அறிக்கையை வழங்க வேண்டும்- ஸ்ரீமதி தாயார் மனுத்தாக்கல்
    X

    ஜிப்மர் மருத்துவமனை குழு ஆய்வு அறிக்கையை வழங்க வேண்டும்- ஸ்ரீமதி தாயார் மனுத்தாக்கல்

    • மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி இன்று விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு வந்தார். அவர் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
    • புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழு அறிக்கை, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோ பதிவுகளை வழங்க வேண்டும்.

    விழுப்புரம்:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்த மாணவி ஸ்ரீமதி கடந்த மாதம் 13-ந்தேதி மர்மமாக இறந்தார்.

    இது தொடர்பாக 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

    அதன்படி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழு மாணவியின் 2 பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் ஆய்வு செய்து அதன் அறிக்கையை விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நேற்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழு அறிக்கையை சமர்ப்பித்தது.

    இன்று காலை மாணவி ஸ்ரீமதியின் தாயார் செல்வி விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்துக்கு வந்தார். அவர் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் கூறி இருப்பதாவது:-

    புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் குழு அறிக்கை, கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செய்யப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் வீடியோ பதிவுகளை வழங்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    மனுவை பெற்றுக்கொண்ட நீதிபதி புஷ்பராணி இதுபற்றி உரிய பதில் வழங்கப்படும் என தெரிவித்தார்.

    Next Story
    ×