search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    காங்கிரசை ஆதரிக்க திருமாவளவன் சொல்லும் காரணம்..!
    X

    காங்கிரசை ஆதரிக்க திருமாவளவன் சொல்லும் காரணம்..!

    • மதச்சார்பின்மை கொள்கையில் ராகுல் காந்தியும் உறுதியாக இருக்கிறார்.
    • மதசார்பின்மையை காப்பாற்ற காங்கிரசோடு இணைந்து களத்தில் நிற்கிறேன் என்றார்.

    தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருப்பதற்கும் காங்கிரசை ஆதரிப்பதற்கும் என்ன காரணம் என்பது பற்றி விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் கூறியதாவது:-

    விடுதலை புலிகளை ஆதரிக்கும் திருமாவளவன் காங்கிரசை ஆதரிக்கலாமா? என்று கேட்கிறார்கள். இலங்கை தமிழர்களுக்காக பாடுபட்ட கட்சிகளில் விடுதலை சிறுத்தைகள் முதன்மையான கட்சி என்பதை யாரும் மறக்க முடியாது. இலங்கை தமிழர்களுக்காக சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தவன் திருமாவளவன்.

    இன்று ஏன் காங்கிரசை ஆதரிக்கிறேன்? பா.ஜனதா அரசால் மதச்சார்பின்மைக்கு ஆபத்து வந்துள்ளது. அகில இந்திய அளவில் மதச்சார் பின்மையை ஆதரிக்கும் கட்சி காங்கிரஸ்.

    அன்று நேரு ஆதரித்தார். அவர் வழியில் இந்திரா ஆதரித்தார். அதைத் தொடர்ந்து ராஜீவ் காந்தியும் ஆதரித்தார்.

    இன்று மதச்சார்பின்மை கொள்கையில் ராகுல் காந்தியும் உறுதியாக இருக்கிறார். எனவே தான் ஆதரிக்கிறோம்.

    வலிமை இல்லாத கட்சியாக இருந்தாலும் பா ஜனதாவுக்கு மாற்று காங்கிரஸ்தான். எனவே தான் காங்கிரசை ஆதரிக்கிறேன் . தற்போதைய நிலையில் விடுதலை சிறுத்தைகளால் மட்டும் பாஜனதாவை தோற்கடிக்க முடியுமா? இல்லை திமுகவால் மட்டும் தோற்கடிக்க முடியுமா? எல்லோரும் இணைந்தால் மட்டும் தான் தோற்கடிக்க முடியும். அதனால் தான் மதசார்பின்மையை காப்பாற்ற காங்கிரசோடு இணைந்து களத்தில் நிற்கிறேன் என்றார்.

    அப்போ இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்த கட்சி காங்கிரஸ் என்றது....? அது முடிந்து போன கதை . அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா என்கிறாரோ?

    Next Story
    ×