என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
வரத்து குறைவால் தக்காளி விலை 'திடீர்' அதிகரிப்பு
ByMaalaimalar27 Oct 2023 12:21 PM IST (Updated: 27 Oct 2023 12:21 PM IST)
- கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைவு காரணமாக மீண்டும் தக்காளிவிலை அதிகரிக்க தொடங்கி உள்ளது.
- மொத்த விற்பனை கடைகளில் தக்காளியின் விலை மேலும் அதிகரித்து ஒரு கிலோ ரூ.30ஆக உயர்ந்தது.
போரூர்:
தக்காளியின் விலை ரூ.100-யை கடந்து உச்சம் தொட்ட நிலையில் பின்னர் படிப்படியாக குறைந்தது. இதைத்தொடர்ந்து கிலோ ரூ.10 முதல் ரூ.15 வரை விற்கப்பட்டதால் இல்லத்தரசிகள் நிம்மதி அடைந்தனர்.
இந்த நிலையில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வரத்து குறைவு காரணமாக மீண்டும் தக்காளிவிலை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இன்று மொத்த விற்பனை கடைகளில் தக்காளியின் விலை மேலும் அதிகரித்து ஒரு கிலோ ரூ.30ஆக உயர்ந்தது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.35 வரை விற்பனை செய்யப்படுகிறது.
ஏற்கனவே பெரிய வெங்காயம், சின்னவெங்காயத்தின் விலை அதிகரித்து வரும் நிலையில் தினசரி சமையலுக்கு பயன்படுத்தப்படும் தக்காளியின் விலையும் திடீரென அதிகரித்து வருவது இல்லத்தரசிகளை பெரிதும் கவலை அடைய செய்துள்ளது.
Next Story
×