என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
எழும்பூர் ரெயில் நிலைய வளாகத்தில் காந்தி சிலைக்கு சத்திய சோதனை- சாக்கடை நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது
- எழும்பூர் ரெயில் நிலைய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள காந்தி சிலை பராமரிப்பின்றி பரிதாபமாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.
- சுற்றிலும் சாக்கடை நீர் சூழ்ந்துள்ள நிலையில் துர்நாற்றத்தின் பிடியில் காந்தி சிலை காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.
தேசப்பிதா என்று அழைக்கப்படும் மகாத்மா காந்திக்கு நாடு முழுவதும் பல இடங்களில் சிலை அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் எழும்பூர் ரெயில் நிலைய வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள காந்தி சிலை பராமரிப்பின்றி பரிதாபமாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.
எழும்பூர் ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவுவாயிலில் பார்சல் பிரிவு வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காந்தி சிலை கவனிப்பாரின்றி உள்ளது. சுற்றிலும் சாக்கடை நீர் சூழ்ந்துள்ள நிலையில் துர்நாற்றத்தின் பிடியில் காந்தி சிலை காட்சி அளித்துக் கொண்டிருக்கிறது.
இந்த சிலையின் வரலாறு கல்வெட்டாக பொறிக்கப்பட்டுள்ளது. ஆனால் கல்வெட்டில் உள்ள எழுத்துகள் எல்லாம் அழிந்து அவை வெறும் காட்சி பொருளாகவே உள்ளது.
ரெயிலில் வரும் பார்சல்கள் குறிப்பாக இரு சக்கர வாகனங்களை இறக்கி நிறுத்தி வைத்துள்ள பகுதியில்தான் இந்த காந்தி சிலை அமைக்கப்பட்டு உள்ளது. பார்சல்களை எடுக்கச் செல்லும் பொது மக்கள் காந்தி சிலையை பார்த்து கண்ணீர் வடிக்கின்றனர்.
நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தந்த மகாத்மா காந்திக்கு நேர்ந்த சத்திய சோதனையா இது? என்று மக்கள் கேள்வி எழும்புகிறார்கள்.
ரெயில்வே வளாகத்தில் உள்ள இந்த சிலையை அதிகாரிகள் சுத்தம் செய்து அதனை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே இனியாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக காந்தி சிலை இருக்கும் பகுதியை சுத்தம் செய்து அந்த பகுதியை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டும் என்பதே தேசபக்தர்களின் வேண்டுகோளாக உள்ளது.
காந்தி சிலைக்கு அதிகாரிகள் உரிய மரியாதையை அளிப்பார்களா? பொறுத்திருந்து பார்ப்போம்.