என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
நீர்மோர் பந்தல் திறக்க வேண்டும்- டி.டி.வி.தினகரன் வேண்டுகோள்
- தமிழகம் முழுவதும் தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் திறந்திட வேண்டுகிறேன்.
- பாதசாரிகளுக்கும், இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கும் உதவியாக அமைந்திட வேண்டும்.
சென்னை:
அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
கோடை வெயிலின் தாக்கத்தால் தொடர்ந்து தமிழகத்தின் பல பகுதிகளில் 100 டிகிரியைத் தாண்டி வெப்பம் அதிகரித்து வருகிறது. மேலும் வெயிலின் தாக்கம் வருங்காலங்களில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இச்சூழலில் சாலைகளில் செல்லும் பொதுமக்களை வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் தமிழகம் முழுவதும் தண்ணீர் மற்றும் நீர்மோர் பந்தல்களை கழக நிர்வாகிகளும், உடன்பிறப்புகளும் திறந்திட வேண்டுகிறேன். இந்தப் பணி, பாதசாரிகளுக்கும், இருசக்கர வாகனங்களில் செல்வோருக்கும் உதவியாக அமைந்திட வேண்டும். அதற்குத் தகுந்த இடங்களைத் தேர்வு செய்து தண்ணீர் மற்றும் நீர் மோர்ப்பந்தல்களை நிறுவிட வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.