என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கண்ட இடங்களில் கழிவுநீரை கொட்டினால் நடவடிக்கை- கழிவுநீர் லாரி உரிமையாளர்களுக்கு குடிநீர் வாரியம் எச்சரிக்கை
- கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்களில் கழிவுநீர் வெளியேற்றுவதற்கான உரிமம் பெற வேண்டும்.
- விண்ணப்பங்கள் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் பெற்று நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
சென்னை:
திறந்தவெளி மற்றும் நீர் நிலைகளில் மலக்கசடு, கழிவுநீர் மற்றும் பிற கழிவுகளை வாகனங்கள் மூலமாக முறையற்ற முறையில் வெளியேற்றுவதை தடுக்கவும் முறையான சுத்திகரிப்பை உறுதி செய்ய நகராட்சி சட்டங்கள் கடந்த மாதம் செயல்பாட்டிற்கு வந்தது.
அதன் அடிப்படையில் சென்னை குடிநீர் வாரிய உரிமம் பெற்ற வாகனங்கள் மட்டுமே வாரியத்தின் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்களில் கழிவுநீர் வெளியேற்றப்பட வேண்டும்.
கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், கோயம்பேடு, தாழங்குப்பம், ஜெய்ஹிந்த் நகர், மணலி நியூ டவுன், மாத்தூர் எம்.எம்.டி.ஏ. தாங்கல்கரை, கடப்பா சாலை, ராமச் சந்திரா நகர், தண்டையார் பேட்டை, ஜவகர்நகர், முகப்பேர் மேற்கு, கீழ்ப்பாக்கம், கீரீம்ஸ் சாலை, கங்காநகர், இந்திரா நகர், எல்.ஐ.சி.காலனி, நெசப்பாக்கம், பெருங்குடி, சோழிங்கநல்லூர் ஆகிய 22 இடங்களில் உள்ள சுத்திகரிப்பு நிலையங்கள் செயல்படுகின்றன.
அதனால் கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்களில் கழிவுநீர் வெளியேற்றுவதற்கான உரிமம் பெற வேண்டும்.
அதற்கான விண்ணப்பங்கள் அனைத்து மண்டல அலுவலகங்களிலும் பெற்று நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் சென்னை குடிநீர் வாரியத்தின் அனுமதியின்றி கழிவுநீர் அகற்றும் பணிகளை மேற்கொள்வதோடு, கண்ட இடங்களில் கழிவு நீரை கொட்டினால் சட்ட விதிகளின்படி கழிவுநீர் லாரி உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாரியம் எச்சரித்து உள்ளது.