என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1500 கனஅடியாக சரிவு- அதிகளவில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
- நீர்வரத்து குறைந்த போதிலும் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து கொட்டியது.
- சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால், பஸ் நிலையம், கடைவீதிகள், ஓட்டல்கள் கூட்டம் அலை மோதியது.
ஒகேனக்கல்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் கன மழை காரணமாக ஒகே னக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பதும் குறைவதுமாக இருந்து வருகிறது.
கர்நாடக மாநிலத்திலும், காவிரி கரையோர நீர் பிடி ப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருவதால் தமிழக-கர்நாடகா எல்லை பகுதி யான பிலிகுண்டுலுவில் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது.
இந்த நீர்வரத்தால் தரு மபுரி மாவட்டம் ஒகேனக் கல்லில் நீர்வரத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு 3000 கனஅடியாக வந்தது.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்ததால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிபடியாக சரிந்து இன்று காலை நிலவரப்படி வினா டிக்கு 1500 கனஅடியாக குறைந்து வந்து கொண்டி ருக்கிறது.
நீர்வரத்து குறைந்த போதிலும் ஒகேனக்கல்லில் மெயின் அருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் சீறிபாய்ந்து கொட்டியது.
நாளை முதல் பள்ளிகள் திறப்பாலும், கோடைவிடு முறை முடிவதாலும் ஒகேனக்கல்லில் இன்று அதிக ளவில் தங்களது குழந்தை களுடன் சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.
ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் பரிசல் நிலை யத்தில் இருந்து ஊட்டமலை, ஐந்தருவி, அத்திமரத்துகடுவு ஆகிய பகுதி வரை பரிசலில் சென்று மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவிகளில் குளித்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பால், பஸ் நிலையம், கடைவீதிகள், ஓட்டல்கள் கூட்டம் அலை மோதியது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக ஒகேனக்கல்லில் நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக இருப்பதால் பிலிகுண் டுலுவில் தொடர்ந்து மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் நீர்வரத்தை கண்காணித்து வருகின்றனர்.