search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கிறிஸ்துவ ஆலயத்திற்குள் நுழைந்த அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்கள்
    X

    கிறிஸ்துவ ஆலயத்திற்குள் நுழைந்த அண்ணாமலைக்கு எதிர்ப்பு தெரிவித்த இளைஞர்கள்

    • அண்ணாமலை உள்ளே வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.
    • தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டத்தில் நேற்று இரண்டாவது நாளாக என் மண், என் மக்கள் நடைபயணம் நடைபெற்றது. இதற்காக மேட்டூரிலிருந்து நேற்று மாலை பொம்மிடி வழியாக பாப்பிரெட்டிப்பட்டி பகுதிக்கு வந்த பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வரும் வழியில் பொம்மிடி அடுத்த பி.பள்ளிப்பட்டி லூர்து மலை அன்னை மேரி தேவாலயத்திற்கு, வந்தார். தொடர்ந்து லூர்து அன்னைக்கு மாலை அணிவிக்க சென்றார்.

    அப்பொழுது கிறிஸ்தவ இளைஞர்கள் சிலர், அண்ணாமலை உள்ளே வரக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.

    அப்பொழுது மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தில், என் மக்களின் இறப்பை ஏன் கேட்கவில்லை, என கேள்வி கேட்டு நீங்கள் மாலை அணிவிக்க கூடாது என, உள்ளே வராதே, திரும்பி போ என கிறிஸ்தவ இளைஞர்கள் கோஷங்களை எழுப்பினர்.

    இதனை தொடர்ந்து முழக்கமிட்ட இளைஞர்களிடம் பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு வார்த்தை நடத்தினார். அப்பொழுது மணிப்பூரில் எங்கள் மக்கள் தாக்கப்பட்டனர். அதற்கு பாஜக தான் காரணம். இந்த இடம் புனிதமானது, இங்கே நீங்கள் வரக்கூடாது என ஆவேசமாக பேசினர்.

    இதனை அடுத்து மாநிலத் தலைவர் அண்ணாமலை அந்த இளைஞர்களை சமாதானப்படுத்தியும் இளைஞர்கள் எங்கள் அன்னைக்கு மாலை அணிவித்து இழிவு படுத்த வேண்டாம் என கூறி மாலை அணிவிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்த காவல் துறையினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை அப்புறப்படுத்தினர்.

    பின்னர் அண்ணாமலை லூர்து மாதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி விட்டு, பாப்பிரெட்டிப்பட்டி நோக்கி சென்றார்.

    தொடர்ந்து லூர்து மாதா அன்னை சிலைக்கு மரியாதை செலுத்த வந்த, பாஜக தலைவர் அண்ணாமலையை, இளைஞர்கள் தடுத்து முழக்கமிட்ட சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    Next Story
    ×