search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது தி.மு.க.வுக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது-  ஜெயக்குமார்
    X

    திருமாவளவன் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பது தி.மு.க.வுக்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது- ஜெயக்குமார்

    • தமிழ்நாட்டை உலக அளவில் நிமிரச் செய்தவர் அண்ணா.
    • அண்ணாவின் புகழை மறைத்து, கருணாநிதியின் புகழ் பாடுகிறது தி.மு.க..

    சென்னை:

    சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த பிறகு முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழ்நாட்டை உலக அளவில் நிமிரச் செய்தவர் அண்ணா. அவரது ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த திட்டங்கள் இன்றளவும் நிலைத்துள்ளது.

    பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளை கொண்டாட தி.மு.க.வுக்கு தகுதி இல்லை. கடந்த 3 ஆண்டு தி.மு.க. ஆட்சியில் அண்ணாவின் பெயர் ஒரு திட்டத்திற்கு கூட வைக்கவில்லை. அண்ணாவின் புகழை மறைத்து, கருணாநிதியின் புகழ் பாடுகிறது தி.மு.க..

    அண்ணாவின் கொள்கை முழுமையாக மறக்கப்பட்டு ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் கிளை இயக்கமாக தி.மு.க. மாறி இருக்கிறது. அண்ணாவை இழிவு படுத்திய அதே பா.ஜ.க. தலைவர்களை அழைத்து வந்து அரசு விழாக்களில் பங்கேற்க செய்துள்ளது.

    இந்த ஆட்சியால் ஈர்க்கப்பட்டு இருக்கும் பொருளாதார முதலீடுகள் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? அவர் முதலீடுகளை ஈர்க்க வெளிநாடு சென்றாரா? அல்லது அவர் முதலீடு செய்ய வெளிநாடுகளுக்கு பயணம் செய்தாரா? என்ற கேள்வியும் மக்களிடையே எழுந்துள்ளது.


    தி.மு.க. கூட்டணியில் இருக்கும் கட்சிகள் நீரில் பூத்த நெருப்பு போல உள்ளது. திருமாவளவன் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு கேட்பது போன்று பேசி இருப்பது தி.மு.க.விற்கு பயத்தை ஏற்படுத்தி உள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடத்தும் மது ஒழிப்பு மாநாடு பொது நோக்கத்தோடு நடத்தப்படுகிறது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மதுஒழிப்பு மாநாடுக்கு எங்கள் தலைமையை நேரடியாக சந்தித்தோ அல்லது கடிதம் மூலமாகவோ அழைப்பு விடுத்தால் மாநாட்டில் பங்கேற்பது குறித்து முடிவு எடுப்போம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மறைமுக தேர்தல் கூட்ட ணியை அ.தி.மு.க. தொடங்கி விட்டதா? என்ற கேள்விக்கு, அரசியலில் அனைத்தும் நடக்கும் என்று டி.ஜெயக்குமார் பதில் அளித்தார்.

    Next Story
    ×