என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
அண்ணா சிலையை உடைத்து அவமதிப்பு- பா.ஜ.க.வை சேர்ந்த 3 பேர் அதிரடி கைது
- தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் போலீசாரிடம் அண்ணா சிலையை உடைத்து, அவமதித்தவர்களை உடனே கைது செய்யவேண்டும் என்று கோஷமிட்டனர்.
- தனிப்படை அமைத்து அண்ணா சிலையை அவமதித்தவர்களை போலீசார் தேடி வந்தனர்.
கண்டமங்கலம்:
விழுப்புரம் அருகே கண்டமங்கலத்தில் புதுவை-விழுப்புரம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் அண்ணாசிலை உள்ளது. இந்த சிலையை மர்ம நபர்கள் உடைத்து செருப்பு மாலை அணிவித்து அவமதித்தனர்.
அதோடு அருகில் இருந்த தி.மு.க. கொடியை இறக்கி உள்ளனர். பின்னர் அந்த கொடியை அண்ணாசிலையின் முகத்தில் மூடிவிட்டு நீலகிரி தொகுதி எம்.பி. ஆ.ராசா உருவ படத்தை தொங்கவிட்டு சென்றுள்ளனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் காட்டுதீ போல பரவியது. இதனால் ஏராளமான தி.மு.க.வினர் திரண்டனர். தகவல் அறிந்த விடுதலை சிறுத்தைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் திரண்டுவந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த கண்டமங்கலம் போலீசார் அங்கு விரைந்தனர். அப்போது தி.மு.க.வினர் மற்றும் கூட்டணி கட்சியினர் போலீசாரிடம் அண்ணாசிலையை உடைத்து, அவமதித்தவர்களை உடனே கைது செய்யவேண்டும் என்று கோஷமிட்டனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து அவர்கள் நடுரோட்டில் அமர்ந்து மறியல் செய்ததால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் உறுதியளித்தனர். அதன் பின்னர் மறியல் கைவிடப்பட்டது. இது தொடர்பாக தனிப்படை அமைத்து அண்ணாசிலையை அவமதித்தவர்களை போலீசார் தேடிவந்தனர்.
விசாரணையில் கண்டமங்கலம் அருகே நவமால்மருதூர் கிராமத்தை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 21), கண்டமங்கலம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்த வீரமணி (22), பிரதீஷ் (24) மற்றும் சிலர் இதில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வீரமணி உள்பட 3 பேரை கைது செய்தனர்.
கைதான 3 பேரும் பா.ஜ.க. உறுப்பினர்கள் என தெரியவந்தது. மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.