search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அக்னிபாத் திட்டம்: விரைவில் உலகத்திற்கே வழிகாட்டியாக இந்தியா விளங்கும்- தமிழக கவர்னர் பேச்சு
    X
    தூத்துக்குடி காமராஜ் கல்லூரி விழாவில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, விடுதலைப் போராட்ட வீரர் வ. உ.சிதம்பரனார் 150-வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு விவேகானந்தா கேந்திரா தயாரித்த வ.உ.சி. குறித்த புத்தகத்தை வெளியிட்ட காட்சி.
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    அக்னிபாத் திட்டம்: விரைவில் உலகத்திற்கே வழிகாட்டியாக இந்தியா விளங்கும்- தமிழக கவர்னர் பேச்சு

    • தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பேசினார்.
    • சனாதன தர்மபடி பொருளாதாரம், அரசியலில் நாடு வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது.

    தூத்துக்குடி:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நடைபெறும் பல்வேறு நிழ்ச்சிகளில் கலந்துகொள்ள 2 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி. சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று தூத்துக்குடி வந்தார்.

    விமான நிலையத்தில் அவரை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

    அங்கிருந்து கார் மூலம் தூத்துக்குடி அரசினர் விருந்தினர் மாளிகைக்கு சென்றார். பின்னர் தூத்துக்குடி காமராஜ் கல்லூரிக்கு சென்ற கவர்னர் அங்கு நடைபெற்ற வ.உ.சிதம்பரனாரின் 150-வது பிறந்தநாள் விழாவில் பங்கேற்று பேசினார்.

    விழாவில் வ.உ.சி. குறித்த புத்தகத்தை கவர்னர் ஆர்.என். ரவி வெளியிட்டு பேசினார். அவர் பேசியதாவது:-

    அக்னிபாத் திட்டம் முக்கியமான திட்டம். 4 வருட பணியினால் ஒழுக்கம் மிக்கவர்களாக மாறுவார்கள். சனாதன தர்மபடி பொருளாதாரம், அரசியலில் நாடு வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது. விரைவில் உலகத்திற்கே வழிகாட்டியாக இந்தியா விளங்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

    விவேகானந்தா கேந்திரா சார்பில் நடைபெற்ற இந்த விழாவில் பத்மஸ்ரீ விருது பெற்ற சோகோ கார்ப்பரேஷன் நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு, தஞ்சை ராமகிருஷ்ணா மடத்தலைவர் சுவாமி விமூர்தானந்தா, கன்னியாகுமரி விவேகானந்தா கேந்திர துணைத்தலைவர் நிவேதிதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    பின்னர் 1 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி தூத்துக்குடியில் இருந்து கார் மூலம் நெல்லை வண்ணார்பேட்டை அரசு விருந்தினர் மாளிகை வந்தார். அங்கு மாலை 3.30 மணி வரை ஓய்வெடுக்கிறார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு தென்காசி மாவட்டம் செல்கிறார். கடையம் அருகே கோவிந்தபேரியில் தேசிய பாதுகாப்பு ஆலோசனை குழு உறுப்பினரும், சோகோ டெக்னாலஜிஸ் நிறுவனரு மான ஸ்ரீதர்வேம்புவை சந்தித்து பேசுகிறார்.

    அதன் பிறகு அருகில் உள்ள முப்பிடாதி அம்மன் கோவில் வளாகத்தில் கிராம மக்களுடன் கலந்துரையாடுகிறார். இந்த நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு குற்றாலம் செல்லும் கவர்னர் ஆர்.என்.ரவி இரவில் அங்குள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்குகிறார்.

    கவர்னர் வருகையையொட்டி நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, மாவட்டங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×