search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி
    X

    கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை வீழ்ச்சி

    • கடந்த 2 வாரங்களாக தக்காளியின் வரத்து மீண்டும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியதால் அதன் விலை குறைய தொடங்கியது.
    • மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.9-க்கு விற்கப்படுகிறது.

    போரூர்:

    கடந்த மாத தொடக்கத்தில் வரத்து குறைவால் தக்காளியின் விலை உச்சத்தை எட்டியது. சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.200 வரை விற்கப்பட்டது. இதனால் இல்லத்தரசிகள் பெரிதும் கவலை அடைந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 2 வாரங்களாக தக்காளியின் வரத்து மீண்டும் படிப்படியாக அதிகரிக்க தொடங்கியதால் அதன் விலை குறைய தொடங்கியது. கடந்த வாரம் மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.18-க்கும் சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ ரூ.25-க்கும் தக்காளி விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று 55 லாரிகளில் தக்காளி விற்பனைக்கு குவிந்துள்ளது. இதையடுத்து தக்காளியின் விலை கடும் வீழ்ச்சி அடைந்து உள்ளது. மொத்த விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.9-க்கு விற்கப்படுகிறது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.15-க்கு விற்கப்படுகிறது.

    கோயம்பேடு மார்க்கெட்டில் இன்றைய காய்கறிகள் மொத்த விற்பனை விலை விபரம் வருமாறு (கிலோவில்):-

    பீன்ஸ்-ரூ.50, ஊட்டி கேரட்-ரூ.40, பீட்ரூட்-ரூ.20, அவரைக்காய்-ரூ.55, வெள்ளரிக்காய்-ரூ.20, உஜாலா கத்தரிக்காய்- ரூ.15, வரி கத்தரிக்காய்-ரூ.10, வெண்டைக்காய்-ரூ.10, பீர்க்கங்காய்-ரூ.20, புடலங்காய்-ரூ.15, முட்டைகோஸ்-ரூ.8, கோவக்காய்-ரூ.8, பட்டை கொத்தவரங்காய்-ரூ.20, நைஸ் கொத்தவரங்காய் ரூ.40, பச்சை மிளகாய்- ரூ.30, இஞ்சி-ரூ.240, புது இஞ்சி- ரூ.80-க்கு விற்கப்படுகிறது.

    Next Story
    ×