search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சென்னையில் மேலும் 2 நாட்கள் இடி மின்னலுடன் மழை பெய்யும்- வானிலை மையம் தகவல்
    X

    சென்னையில் மேலும் 2 நாட்கள் இடி மின்னலுடன் மழை பெய்யும்- வானிலை மையம் தகவல்

    • தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.
    • சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது.

    சென்னை:

    சென்னையில் பகலில் கடுமையான வெயிலும் அதிகாலையில் குளிரும் நிலவி வருகிறது. வெயிலின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதால் மக்கள் இப்போதே வாடி வதங்கும் நிலை உள்ளது.

    ஏப்ரல், மே மாதங்களில் வெயில் உச்சகட்டத்தை அடையும்போது மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை ஏற்படக்கூடும்.

    இந்த நிலையில் வளிமண்டல சுழற்சி காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று பரவலாக மழை பெய்தாலும் ஒரு சில இடங்களில் நல்ல மழை பெய்தது.

    பெரம்பூர், மூலக்கடை, நுங்கம்பாக்கம், தி.நகர், அடையாறு, கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட பகுதிகளில் பகலில் திடீரென மழை பெய்தது. பெருங்குடி, மடிப்பாக்கம், சோழிங்கநல்லூர் பகுதியிலும் கோடை மழை வெளுத்து வாங்கியது. வேளச்சேரியில் ஆலங்கட்டி மழை கொட்டியது.

    தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. 20-ந் தேதி வரை பரவலாக மழை பெய்யக்கூடும் என்ற வானிலை அறிவிப்பை தொடர்ந்து சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை பெருங்குடியில் 9 செ.மீ. மழை பெய்துள்ளது.

    முகலிவாக்கம், கோடம்பாக்கம், சென்னை விமான நிலையத்தில் தலா 7 செ.மீ., ஊத்துக்கோட்டையில் 6 செ.மீ. மழை பெய்துள்ளது.

    சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்தது. கோவை, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் 22-ந் தேதி வரை இடி மின்னலுடன் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். சென்னையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு ஒரு சில இடங்களில் இடியுடன் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்து உள்ளது.

    Next Story
    ×