search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    வேன் கவிழ்ந்து 5 பேர் பலி- சோகத்தில் மூழ்கிய குடும்பங்களால் திருமணம் நிறுத்தம்
    X

    வேன் கவிழ்ந்து 5 பேர் பலி- சோகத்தில் மூழ்கிய குடும்பங்களால் திருமணம் நிறுத்தம்

    • விபத்தில் பெண் வீட்டார் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது.
    • திருமணத்துக்கு வந்த மணமக்கள் உறவினர்கள் சோகத்துடன் ஊர் திரும்பினர்.

    மேலசொக்கநாதபுரம்:

    கேரள மாநிலம் மூணாறு அருகே கே.டி.எச்.பி. கம்பெனிக்கு சொந்தமான தனியார் எஸ்டேட் நிறுவனத்தை சேர்ந்த வாலிபருக்கும், நெல்லை மாவட்டம் மேலப்பாலாமடை இந்திரா நகர் காலனியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. இந்த திருமணத்துக்காக மேலப்பாலாமடையில் இருந்து பெண் அழைத்து வரப்பட்டார். ஒரு வேனில் உறவினர்கள் பெண்ணுடன் வந்துகொண்டிருந்தனர். கொச்சி-தனுஷ்கோடி தேசிய நெடுஞ்சாலையில் போடிமெட்டு அருகே தோண்டிமலை இரைச்சல்பாறை பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து அந்த வேன் பள்ளத்தில் கவிழ்ந்தது.

    இதில் சம்பவ இடத்திலேயே ஒரு சிறுவன் உள்பட 4 பேர் பலியாகினர். வேன் டிரைவர் உள்பட 17 பேர் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.

    சிகிச்சையில் இருந்த ஜானகி (வயது55) நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனையடுத்து பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. இதில் வள்ளியம்மாள், அவரது பேரன் விஸ்வா உடல்கள் அடிமாலி தாலுகா ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதனையடுத்து அவர்களது உடல்கள் எஸ்டேட் அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

    விபத்தில் பெண் வீட்டார் குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உயிரிழந்ததால் திருமணம் நிறுத்தப்பட்டது. இதனால் திருமணத்துக்கு வந்த மணமக்கள் உறவினர்கள் சோகத்துடன் ஊர் திரும்பினர். இதனிடையே விபத்து நடந்த பகுதியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    வாகனத்தின் பிரேக் சரியாக இருந்தது. ஆபத்தான வளைவு, இறக்கம் கொண்ட சாலையில் அதிவேகமாக வாகனத்தை ஓட்டியதால் இந்த விபத்து நடந்துள்ளது.

    இந்த சாலையில் வாகனங்கள் மெதுவாக செல்லும்படி தொடர்ந்து அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. இருந்தபோதும் அனுபவம் இல்லாத டிரைவர், அதிகாலையில் பனிமூட்டம் காரணமாக இந்த விபத்து நடந்துள்ளது. வரும் காலங்களில் இதுபோன்ற விபத்துக்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இந்நிலையில் விபத்தில் காயம் அடைந்த 15 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 2 பேர் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

    Next Story
    ×