என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கொசப்பேட்டையில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் குவிந்தன
- சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் களிமண்ணால் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகிறது.
- விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர்.
சென்னை:
சதுர்த்தி விழா 31- ந்தேதி கொண்டாடப்படுவதையொட்டி சென்னை கொசப்பேட்டையில் பிரமாண்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்கு குவிந்து உள்ளன.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் விநாயகர் சதுர்த்தி விழா ஒன்று ஆகும். ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சதுர்த்தி விழா நாடு முழுவதும் வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்திவிழா வருகிற 31-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி சிறிய வகையிலான களிமண் விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி சென்னை கொசப்பேட்டையில் தீவிரமாக நடந்து வருகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாத வகையில் களிமண்ணால் விநாயகர் சிலைகள் செய்யப்பட்டு வருகிறது.
விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணியில் 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டு உள்ளனர். இங்கு பல்வேறு விதமான கண்கவர் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. 2 அடி உயரம் வரை இங்கு விநாயகர் சிலைகள் உருவாக்கப்படுகின்றன.
ரூ.100 முதல், ரூ.1000 வரை விலையில் சிலைகள் களிமண்ணால் தயாராகி வருகின்றன.
பல்வேறு விதமான வடிவில் தயாராகி வரும் விநாயகர் சிலைகளுக்கு வர்ணங்கள் பூசப்பட்டு மெருகேற்றப்படுகிறது. இங்கு தயாரிக்கப்படும் விநாயகர் சிலைகள் விற்பனைக்காக பல்வேறு ஊர்களுக்கு அனுப்பப்படுகின்றன.
மேலும் கொசப்பேட்டையில் ஐந்து அடி முதல் 12 அடி உயரம் வரையிலான பிரம்மாண்ட விநாயகர் சிலைகள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டுள்ளன. சென்னை புறநகர், பெரியபாளையம் திருவள்ளூர், காஞ்சிபுரம், ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெரிய வடிவிலான விநாயகர் சிலைகள் விற்பனைக்கு லாரிகள் மூலம் கொண்டு வரப்பட்டு உள்ளன.
கொசப்பேட்டை 5 விளக்கு சந்திப்பு, வெங்கடேசன் தெரு, ஏமிதெரு உள்ளிட்ட பல்வேறு தெருக்களில் பெரிய வகையிலான விநாயகர் சிலைகள் தற்போது சாலையோரத்தில் விற்பனைக்காக குவிக்கப்பட்டு உள்ளன. கம்பீரமாக பலவித வண்ணங்களில் கண்ணை கவரும் வகையில் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கிறார்கள்.
மேலும் 31-ந் தேதி அன்று விநாயகர் சதுர்த்தி விழா பூஜைக்காக இந்து அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் பிரமாண்ட விநாயகர் சிலைகளை முன்பதிவு செய்து வருகிறார்கள். வெயில், மழை பாதிப்பில் இருந்து தடுக்க அனைத்து விநாயகர் சிலைகளும் பாலித்தின் கவரில் மூடப்பட்டு பாதுகாப்பு செய்யப்பட்டு உள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்