search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வியாசர்பாடி கணேசபுரம் ரெயில்வே மேம்பாலம் பணி அடுத்த வாரம் தொடங்குகிறது
    X

    வியாசர்பாடி கணேசபுரம் ரெயில்வே மேம்பாலம் பணி அடுத்த வாரம் தொடங்குகிறது

    • கணேசபுரம் ரெயில்வே மேம்பாலம் புதிய தொழில் நுட்பத்தில் சென்னை ஐ.ஐ.டி.யின் அங்கீகாரத்துடன் கட்டப்படுகிறது
    • பாலம் கட்டி முடிக்க 2 வருடம் ஆகும் என திட்டமிடப்பட்டு இருந்தாலும் 18 மாதங்களில் பணியை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்படும்.

    சென்னை:

    வடசென்னை என்று அழைக்கக்கூடிய வியாசர்பாடி, கொளத்தூர், மாதவரம், கொடுங்கையூர், கண்ணதாசன் நகர், மகாகவி பாரதியார் நகர், மூலக்கடை ஆகிய பகுதிகளுக்கு செல்வதற்கு வியாசர்பாடி கணேசபுரம் ரெயில்வே சுரங்கப்பாதையை கடந்து செல்ல வேண்டும்.

    மழைக்காலங்களில் சுரங்கப்பாதையை கடந்து செல்ல முடியாக அளவற்கு மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன போக்குவரத்து தடைபடும். அப்பகுதி மக்கள் மாற்றுப்பாதை வழியாக தங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது.

    சென்னை மாநகராட்சி மூலமாக அங்கு மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. ரூ.142 கோடி செலவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு தனியார் நிறுவனம் மேம்பாலம் கட்டுமான பணியை தொடங்க உள்ளது. முழுக்க முழுக்க மாநகராட்சி நிதியின் மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

    கணேசபுரம் ரெயில்வே மேம்பாலம் புதிய தொழில் நுட்பத்தில் சென்னை ஐ.ஐ.டி.யின் அங்கீகாரத்துடன் கட்டப்படுகிறது. இந்த மேம்பாலம் 15.2 மீட்டர் அகலத்திலும் 600 மீட்டர் நீளத்திலும் கட்டப்படுகிறது.

    புளியந்தோப்பு ஆட்டுதொட்டியில் இருந்து செல்லும்போது 2 வழியாகவும் வியாசர்பாடியில் இருந்து புளியந்தோப்புக்கு வரும்போது 2 வழியாகவும் மொத்தம் 4 வழி பாதையாக இந்த மேம்பாலம் அமைக்கப்படுகிறது. ஆட்டுத்தொட்டியை அடுத்த கால்வாய் பகுதியில் இருந்து மேம்பாலம் தொடங்கி ரெயில்வே சுரங்கப்பாதையை கடந்து பெட்ரோல் பங்க் வரை கட்டப்படுகிறது.

    இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி கூறியதாவது:-

    கணேசபுரம் ரெயில்வே மேம்பால பணிக்கான மண் ஆய்வு செய்தல் உள்ளிட்ட பல்வேறு வேலைகள் முடிந்து விட்டன. அடுத்த வாரத்தில் மேம்பால பணிகள் தொடங்கும். ரெயில்வே பகுதியில் மட்டும் 58 மீட்டர் கட்டுமான பணி நடக்கிறது. ரெயில்வே பாதை உள்ள பகுதியில் 45 அடி உயத்திற்கு மேம்பாலம் கட்டப்படும்.

    வில்லிவாக்கத்தில் ரெயில்வே மேம்பாலத்தில் பயன்படுத்தப்பட்டது போல் முற்றிலும் இரும்பு பீம்களால் இப்பாலம் அமைக்கப்படுகிறது. கான்கிரீட்டிற்கு பதிலாக இரும்பு ரெடர்கள் பயன்படுத்தப்படுகிறது.

    இந்த பாலம் கட்டி முடிக்க 2 வருடம் ஆகும் என திட்டமிடப்பட்டு இருந்தாலும் 18 மாதங்களில் பணியை முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்படும். ரெயில்வே பாதை உள்ள பகுதியில் தான் கட்டுமானப்பணி தாமதமாகும். கட்டுமான பணிக்காக குறிப்பிட்ட நேரத்தில் ரெயில் சேவையை நிறுத்தி கொடுப்பதன் மூலம் விரைவாக முடிக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×