என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழ்நாட்டில் 13 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள் 3 மாதமாக பொருட்கள் வாங்காதது ஏன்?- வீடு வீடாக விசாரணை
- ரேஷன் அட்டையில் இடம் பெற்றுள்ள நபர் வந்துதான் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியும்.
- ரேஷன் கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்காதது ஏன்? அவை போலி கார்டுகளா? என்பது பற்றி விசாரிக்க உணவு பொருள் பாதுகாப்பு துறை ஆணையர் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:
தமிழ்நாட்டில் 2 கோடியே 60 லட்சம் ரேஷன் கார்டுகள் உள்ளன. ஆதார் எண் விவரம் மற்றும் கைரேகை பதிவு மூலம் இவை கணினி மயமாக்கப்பட்டு செல்போன் எண்களும் இணைக்கப்பட்டுள்ளன.
ரேஷன் அட்டையில் இடம் பெற்றுள்ள நபர் வந்துதான் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க முடியும். மற்றவர்களிடம் ரேஷன் கார்டை கொடுத்து அனுப்பி இப்போது பொருட்கள் வாங்க இயலாது.
அரசின் இந்த நடவடிக்கையால் தற்போது போலி ரேஷன் கார்டுகளை ஓரளவு கண்டுபிடிக்க முடிகிறது. குடும்ப அட்டை வைத்திருப்பவர்கள் அத்தியாவசிய பொருட்கள் மட்டுமின்றி பொங்கல் இலவச பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நிவாரண உதவிகளும் வழங்கப்படுகிறது. இதனால் ரேஷன் கார்டு எல்லா வீடுகளிலும் உள்ளது.
இந்த கார்டுகளுக்கு ஒரு சில குடும்பத்தில் பொருட்கள் வாங்குவது கிடையாது. அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் 13 லட்சத்து 12 ஆயிரம் பேர் கடந்த 3 மாதமாக ரேஷன் பொருட் கள் வாங்காமல் இருப்பது தெரியவந்துள்ளது.
எனவே இந்த கார்டுதாரர்கள் பொருட்கள் வாங்காதது ஏன்? அவை போலி கார்டுகளா? என்பது பற்றி விசாரிக்க உணவு பொருள் பாதுகாப்பு துறை ஆணையர் விசாரிக்க உத்தரவிட்டுள்ளார்.
அதன் அடிப்படையில் ரேஷன் கடை ஊழியர்கள் கடைசி 3 மாதங்களாக பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுதாரர்களுக்கு போன் செய்து என்ன காரணத்தினால் பொருட்கள் வாங்கவில்லை என்று விசாரித்து பதிவு செய்து அதை மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்பி வருகின்றனர்.
இதுபற்றி ரேஷன் கடைக்காரர்கள் கூறுகையில், ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் எதற்காக பொருட்கள் வாங்க வரவில்லை என்று விசாரிப்பதன் நோக்கம், அந்த கார்டு போலி ரேஷன் கார்டா? என்பதை கண்டறிவதற்குதான்.
ரேஷன் கார்டில் உள்ளவர்கள் அந்த முகவரியில் தான் உள்ளார்களா? அல்லது வீடு மாறி சென்று விட்டார்களா? அல்லது குடும்பத்தலைவர் யாரேனும் இறந்து விட்டார்களா? என்று விசாரிக்கிறோம்.
இதில் ஓரளவு போலி ரேஷன் கார்டடை கண்டறிய முடியும். அதன் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்