search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    கள் விற்பனையை ஏன் அனுமதிக்க கூடாது- அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
    X

    கள் விற்பனையை ஏன் அனுமதிக்க கூடாது- அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி

    • டாஸ்மாக் நிர்வாகம் குறிப்பிட்ட சில பிராண்ட் மதுபானங்களை மட்டும் விற்கிறது.
    • தமிழகத்தில் விற்கப்படும் மதுபானங்களின் தரத்தை விட, வெளிமாநிலங்களில் மதுபானங்களின் தரம் அதிகமாக உள்ளது.

    சென்னை:

    சென்னையைச் சேர்ந்த முரளிதரன் தாக்கல் செய்த மனுவில், தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற்ற தகவலில், 2020-21-ம் ஆண்டு 39 ஆயிரத்து 760 கோடி ரூபாயும், 2021-22-ம் ஆண்டில் 42 ஆயிரத்து 421 கோடி ரூபாயும் விற்று முதல் பெற்றதாக கூறிய டாஸ்மாக் நிர்வாகம், இந்த ஆண்டுகளில் 161 கோடி ரூபாயும், 69 கோடி ரூபாயும் இழப்பை சந்தித்ததாகக் கூறியுள்ளது

    டாஸ்மாக்குக்கு மதுபானம் சப்ளை செய்யும் நிறுவனங்கள், பெரும்பா லும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்களுக்கு சொந்தமானதாக உள்ளது. இதனால் டாஸ்மாக் நிர்வாகம் குறிப்பிட்ட சில பிராண்ட் மதுபானங்களை மட்டும் விற்கிறது.

    தமிழகத்தில் விற்கப்படும் மதுபானங்களின் தரத்தை விட, வெளிமாநிலங்களில் மதுபானங்களின் தரம் அதிகமாக உள்ளது.

    டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களுக்கு 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அதிகம் விற்பனை செய்வதாகவும், இதன்மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாயை டாஸ்மாக் கடை விற்பனையாளர், மேலாளர், துறை அமைச்சர் பகிர்ந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    மதுபான பாட்டில்களில் அச்சிடப்பட்டிருக்கும் விற்பனை விலையை விட கூடுதல் விலை கொடுக்க வேண்டாம் என எல்லா டாஸ்மாக் கடைகளிலும் அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட வேண்டும். கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க, சில கட்டுப்பாடுகளுடன் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும்

    இவ்வாறு கூறியிருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் ,நீதிபதி குமரேஷ்பாபு ஆகியோர் வழக்கிற்கு பதில் அளிக்கும்படி அரசுக்கு உத்தரவிட்டனர்.

    Next Story
    ×